Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்னை டூ பெங்களூர் இனி ரயிலில் 3 மணி நேரத்தில் செல்லலாம் ! அசத்தும் மோடி சர்க்கார்!

சென்னை டூ பெங்களூர் இனி ரயிலில் 3 மணி நேரத்தில் செல்லலாம் ! அசத்தும் மோடி சர்க்கார்!

SG SuryahBy : SG Suryah

  |  3 Dec 2018 12:39 PM GMT

அதிவேக ரயில்களை இயக்குவது மத்திய அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்று. மும்பை முதல் அகமதாபாத் வரை புல்லட் ரயிலை அறிமுகப்படுத்த அனைத்து வேலைகளும் மும்முரமாக நடைபெறுகிறது. மோடியின் கனவு திட்டங்களில் இதுவும் ஒன்று. ஆனால் நாடு முழுவதும் புல்லட் ரயிலை அறிமுகப்படுத்துவது என்பது தற்போது சாத்தியமில்லை. ஆதலால் அதிவிரைவு ரயில்களை அறிமுகப்படுத்துவது, இருக்கும் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது போன்ற திட்டங்களில் மத்திய அரசு கவனம் செலுத்திவருகிறது.
மோடியின் ஆட்சியின் கீழ் ரயில்வே துறையில் பல புதுமையான திட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது. முக்கியமாக பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துகிறது. நாட்டிலுள்ள அனைத்து ஆளில்லா ரயில்வே கிராஸ்ஸிங் அகற்றுபட்டுவிட்டன, பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கீட்டை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக 57 ஆண்டுகளில் இல்லாத அளவு விபத்துகள் குறைந்துள்ளது.
இந்த சாதனைகளின் தொடர்ச்சியாக சென்னை ICF ல் தயாரிக்கப்பட்ட என்ஜின் இல்லா "ரயில் 18" ன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. கோட்டா முதல் சவை வரை நடந்த சோதனை ஓட்டத்தில் 180 kmPH முதல் 200 KmPH வேகத்தை தொட்டு இந்தியாவின் மிக வேகமான ரயில் என்ற பெருமையை பெற்றுள்ளது. வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பர் 25 ஆம் தேதி டெல்லி முதல் வாரணாசி வரை அறிமுகப்படுத்த இருக்கிறது. சராசரி வேகம் 90 KmPH ஆக இருக்கும். சென்னை டூ பெங்களூரு வழித்தடத்தில் அறிமுகப்படுத்தினால் 3 மணி நேரத்தில் பெங்களூரு சென்றடையலாம்.
இந்த ரயிலில் பல வசதிகள் உள்ளன. புஷ் பேக் இருக்கைகள் கொடுக்கப்படுவதுடன், கால்கள் வைக்க தாராளமான இடவசதி பயணிகளுக்கு நிறைவான பயண அனுபவத்தை ரயில் 18 சேவை வழங்க உள்ளது. ஒவ்வொரு பயணிக்கும் தனித்தனி டிவி வசதி, சிசிடிவி கேமரா, சுகாதாரமான கழிப்பறை வசதி, வினைல் ஃபுளோரிங் உள்ளிட்டவற்றுடன் அதி நவீன தொழில்நுட்பத்துடன் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 16 பெட்டிகளுடன் ரூ 100 கோடி செலவில் தயாராகியுள்ளது "ரயில் 18".
Next Story