Top
undefined
Begin typing your search above and press return to search.

கறுப்புப்பணம் பதுக்கிய சென்னை நிறுவனம்: விவரத்தை வெளியிட்டது ஸ்விட்சர்லாந்து! கறுப்பு பணத்திற்கு எதிராக முதல் வெற்றி கண்ட மோடி சர்க்கார்!

கறுப்புப்பணம் பதுக்கிய சென்னை நிறுவனம்: விவரத்தை வெளியிட்டது ஸ்விட்சர்லாந்து! கறுப்பு பணத்திற்கு எதிராக முதல் வெற்றி கண்ட மோடி சர்க்கார்!

SG SuryahBy : SG Suryah

  |  3 Dec 2018 6:53 AM GMT

ஸ்விட்சர்லாந்து அரசு, அந்நாட்டு வங்கியில் பதுக்கப்பட்டுள்ள இந்திய நிறுவனங்களின் கறுப்புப்பணம் தொடர்பான விவரங்களை அரசுக்கு அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
கறுப்புப்பணம் பதுக்கல் விவகாரத்தில் 2 இந்திய நிறுவனங்களின் பெயர்களை வெளியிட்டுள்ள ஸ்விட்சர்லாந்து அரசாங்கம், அவற்றின் விவரங்களை மத்திய அரசிடம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்புப்பணத்தை மீட்க மத்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் கறுப்புப்பணத்தை பதுக்கியவர்களின் பட்டியலையோ, விவரங்களையோ வெளியிட ஸ்விட்சர்லாந்து அரசு தொடர்ந்து மறுத்து வந்தது. இந்நிலையில் மத்திய அரசின் தொடர் அழுத்தம் காரணமாக ஸ்விட்சர்லாந்து அரசு 2 நிறுவனங்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது.
மும்பையை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ஜியோடெசிக் மற்றும் சென்னையைச் சேர்ந்த ஆதி என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய 2 நிறுவனங்களே அவை. இந்த 2 நிறுவனங்களின் மீதும் ஏற்கனவே வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையின் சார்பில் வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த இரு நிறுவனங்களின் பெயர்களை வெளியிட்டுள்ள ஸ்விட்சர்லாந்து அரசு, அவை ஸ்விஸ் வங்கியில் பதுக்கியுள்ள கறுப்புப்பணம் தொடர்பான விவரங்களை அரசுக்கு அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது
Next Story