Top
undefined
Begin typing your search above and press return to search.

ஆம் ஆத்மி அரசுக்கு சரியான சவுக்கடி - அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்..!

ஆம் ஆத்மி அரசுக்கு சரியான சவுக்கடி - அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்..!

SG SuryahBy : SG Suryah

  |  4 Dec 2018 2:13 AM GMT

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஸ்வெட்டர்ஸ் முகம் முகமூடிகள் அணிந்து செல்கின்றனர். உலகில் மிக மோசமான காற்று மாசுபாடு டெல்லியில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது. பனிபொழிவு அதிகரிப்புடன் காற்றும் மாசுபட்டுள்ளதால் மக்களும் முகமூடிகளை அணிந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் மாசுபட்ட வளிமண்டலத்தில் இருந்து தங்களை பாதுகாக்க டெல்லியில் உள்ள 25 லட்சம் மக்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பெய்ஜிங் மற்றும் சில ஆசிய நாடுகள் இந்த நடவைக்கையை எடுத்துள்ளன. டெல்லியில் ஏற்கனவே நீண்ட பனிப்பொழிவு உள்ளது. இந்நிலையில் காற்று மாசு பாடு அதிகரித்துள்ளது அங்குள்ள மக்களுக்கு மேலும் கவலை அளித்துள்ளது. இது குறித்து டெல்லி மாசுகட்டுப்பாட்டு வாரியம் நடைவடிக்கை எடுத்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த தவறிய ஆம் ஆத்மி அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் 25 ரூபாய் கோடி அபராதம் விதித்துள்ளது.


டெல்லி அரசு பனியாளர்களின் சம்பளத்தில் இருந்தும், சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவர்களிடம் இருந்தும் பணத்தை பிடித்தம் செய்து இந்த தொகையை செலுத்துமாறும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த அபராத தொகையை கட்டத் தவறினால் மாதந்தோறும் 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது.

Next Story