Top
undefined
Begin typing your search above and press return to search.

சபரிமலை ஐயப்பன் சன்னதி வருமானம் கடும் சரிவு, அதிர்ச்சியில் பினராயி அரசு : ஹிந்துக்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி

சபரிமலை ஐயப்பன் சன்னதி வருமானம் கடும் சரிவு, அதிர்ச்சியில் பினராயி அரசு : ஹிந்துக்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி

SG SuryahBy : SG Suryah

  |  4 Dec 2018 12:05 PM GMT

சபரிமலை ஐயப்பன் சன்னதியில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சன்னதியின் வருமானம், கடந்த ஆண்டை விட குறைந்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது என்று தந்தி செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. கோயிலின் நடை திறந்தில் இருந்து கடந்த 13 நாட்களில் இதுவரை ₹19 கோடி வருமானம் கிடைத்துள்ளது என்றும் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், 50 கோடியே 5 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்தது என்றும் அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
அதன்படி, கடந்த ஆண்டை விட, ₹31 கோடி வருமானம் குறைந்துள்ளது. இதுபோல, சன்னதியின் உண்டியல் மூலம் கிடைத்த வருமானமும் கடந்த ஆண்டை விட ₹8 கோடி குறைந்துள்ளது. கடந்த ஆண்டு  ₹21  கோடியே 94 லட்ச ரூபாய்க்கு அரவணை பிரசாதம் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு ₹7 கோடியே 23 லட்ச ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகியுள்ளது.
இதனை அடுத்து பினராயி தலைமையிலான கேரள கம்யூனிஸ்ட் அரசு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது ஹிந்துக்களின் ஒற்றுமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று போராட்டத்தில் ஈடுபட்ட லட்சக்கணக்கான ஹிந்துக்களிடையே கருதப்படுகிறது.
Next Story