Top
undefined
Begin typing your search above and press return to search.

ஆங்கிலேய கிறித்தவ ஏகாதிபத்தியத்தின் ப்ரோக்கர் ஆளுநரை ப்ரோக்கர் என்கிறார் : வைகோவை H.ராஜா கடும் தாக்கு

ஆங்கிலேய கிறித்தவ ஏகாதிபத்தியத்தின் ப்ரோக்கர் ஆளுநரை ப்ரோக்கர் என்கிறார் : வைகோவை H.ராஜா கடும் தாக்கு

SG SuryahBy : SG Suryah

  |  4 Dec 2018 8:07 AM GMT

நேற்று நடந்த ஆர்பாட்டம் ஒன்றில் ம.தி.மு.க தலைவர் வைகோ, பாரத பிரதமரையம், மேதகு ஆளுநரையும் மிகவும் அநாகரிகமான முறையில் பேசியுள்ளார். இதனை கண்டித்து பா.ஜ.க தேசிய செயலாளர் திரு ஹெச். ராஜா அவர்கள் வைகோவை கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள  ட்விட்டர் பதிவில், "மாண்புமிகு பிரதமர் மோடிஜி அவர்களையும், மேதகு ஆளுநர் அவர்களையும் வைகோ அவர்கள் அநாகரிகமாக பேசியுள்ள தை வன்மையாக கண்டிக்கிறேன். ஆங்கிலேய கிறித்தவ ஏகாதிபத்தியத்தின் brokers ஆளுநரை broker என்கிறார். இந்த வெட்கம் கெட்ட கும்பலை அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்த உறுதியேற்போம்", என்று பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/HRajaBJP/status/1069798121578749952?s=19
முன்னதாக ம.தி.மு.க நடத்திய போராட்டத்தின் போது அருகில் இருந்த டீக்கடையில் தி.மு.க பிரமுகர் சுரேஷ் பாபு கைகலப்பில் ஈடுபட்டுதாக செய்திகள் வெளியாயின. அநேகமாக ஓசியில் சாப்பிட பொருள் கொடுக்காததால் கைகலப்பில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இதனை அடுத்து ட்விட்டரில் #ஓசிடீதிமுக என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. ஆனால், பத்திரிக்கையாளரை தாக்கியது தி.மு.க நிர்வாகி இல்லை என்று தி.மு.க தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பத்திரிக்கையாளர் மீதான தாக்குதலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டிக்காமல் இருப்பது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
Next Story