Top
undefined
Begin typing your search above and press return to search.

அமெரிக்காவிலிருந்தபடியே கஜா நிவாரணப் பணிகளை முடுக்கி விடும் நிர்மலா சீத்தாராமன் : பத்திரிகைகள், நெட்டிசன்கள் பாராட்டு !

அமெரிக்காவிலிருந்தபடியே கஜா நிவாரணப் பணிகளை முடுக்கி விடும் நிர்மலா சீத்தாராமன் : பத்திரிகைகள், நெட்டிசன்கள் பாராட்டு !

SG SuryahBy : SG Suryah

  |  4 Dec 2018 10:13 AM GMT

இந்திய இராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சில தினங்களுக்கு முன்பு கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுற்றிப் பார்த்து மக்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது அதிக அளவில் மண்ணெண்ணெய், தென்னை மரங்களை இழந்த விவசாயிகளுக்கு அந்தமான் தீவிலிருந்து தென்னை கன்றுகள், வீடிழந்தவர்களுக்கு பிரதமர் திட்டத்தில் வீடுகள் மற்றும் மத்திய அரசு சார்பில் நிவாரணத் தொகை விரைவில் வழங்கப்படும் என உறுதியளித்தார். மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாநில அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய அவர் மத்திய அரசின் நிவாரண நிதி உதவி வங்கிகள் மூலம் பொது மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் நிதி வழங்குவதில் எந்த விதமான முறைகேடும் இல்லாதவாறு பார்த்துக் கொள்வதுதான் பிரதமர் மோடி அவர்களின் விருப்பம் என்றும்
திட்டவட்டமாக குறிப்பிட்டார்
. இதற்கு பதிலளித்த மாநில அமைச்சர்கள் எலக்ட்ரானிக் செலுத்தல் முறை மூலம் எந்த வித தில்லுமுல்லுகளுக்கும் வாய்ப்பில்லாமல் பணம் பட்டுவாடா செய்யப்படும் என்று உறுதி அளித்தனர்.
உடனடியாக டெல்லி சென்ற அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கை சந்தித்து டெல்டா மாவட்டத்தின் பரிதாபமான நிலையை எடுத்துக் கூறி உடனடியாக வாழை, மற்றும் தென்னை மரங்களை இழந்த விவசாயிகளுக்கு தான் அளித்த உறுதி மொழிகளின்படி உதவ வேண்டும் என வலியுருத்தினார். இந்த நிலையில் இன்று டெல்டா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் தென்னை தோட்டங்களை பார்வையிட இந்திய தோட்டக்கலைத்துறை இணை ஆணையர் மற்றும் அகில இந்திய தென்னை வளர்ச்சி வாரிய தலைவர் தலைமையிலான அதிகாரிகள் குழு டெல்டா மாவட்டத்துக்கு வந்துள்ளனர்.
https://twitter.com/nsitharaman/status/1069591176725098497?s=20
இந்த நிலையில் இந்தோ பசிபிக் கடல் பகுதிகளில் சீன அத்துமீறலால் ஏற்படும் விளைவுகள் குறித்த அமெரிக்க அரசு அதிகாரிகளுடன் முக்கிய கூட்டத்தில் கலந்துக்கொள்ள நிர்மலா சீத்தாராமன் வாஷிங்டன் சென்றிருந்தார். நேற்று அதிகாலை காலை 3.30 மணி அளவில் கூட்டத்துக்கான குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்த அவர் அந்த பரபரப்பான நேரத்திலும் டெல்லியிலுள்ள தனது உதவியாளருக்கும், அதிகாரிகளுக்கும் அனுப்பிய வாட்ஸ் அப்பில் "கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண்ணெண்ணெய் வழங்கும் பணி முடிவுற்றதா? என்ன ஆயிற்று?" என்பதை உடனடியாக உறுதிப்படுத்தும்படி கேட்டுள்ளார். அதிகாலை நேரத்தில் வந்த இந்த வாட்ஸ் அப் செய்தியை பார்த்து உதவியாளர் அதிசயித்துப் போனதாக தெரிவிக்கப்படுகிறது. சமூக ஊடகங்கள் மூலம் இந்த செய்தி அறிந்த நெட்டிசன்கள் மற்றும் அதிகாரிகள் நிர்மலா சீத்தாராமன் அவர்களின் வேகம் கஜா புயலை வேகமாக உள்ளதாக பாராட்டி வருகின்றனர். இன்றைய ஆங்கில செய்தி தாள்களும் அவரை பாராட்டியுள்ளன.
Next Story