Kathir News
Begin typing your search above and press return to search.

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை, காமாலை கண் கொண்டு பார்க்க வேண்டாம் - ராகுலுக்கு அலெக்சாண்டரே பதிலடி

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை, காமாலை கண் கொண்டு பார்க்க வேண்டாம் - ராகுலுக்கு அலெக்சாண்டரே பதிலடி

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை, காமாலை கண் கொண்டு பார்க்க வேண்டாம் - ராகுலுக்கு அலெக்சாண்டரே பதிலடி

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Dec 2018 5:37 PM GMT





காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது இந்திய விமான படைக்கு ரபேல் ஜெட் போர் விமானங்கள் வாங்குவதற்காக அரசு விதிகளை பின்பற்றி உலக அளவில் டெண்டர் கோரப்பட்டு ஒரு விமானம் ₹526 கோடிக்கு வாங்குவது என முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் 2014-ல் பா.ஜ.க.வின் மோடி அரசு பொறுப்பேற்றதும் சில விதிகளை மீறி பிரான்ஸ் அரசுடன் ஒரு விமானத்தின் விலையை ₹1,670 கோடி என நிர்ணயித்து ஒப்பந்தம் போட்டதில் ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.மேலும் அனில் அம்பாணி தொடர்பானது குறித்தும் கேள்வி எழுப்பபட்டது.


36 ரபேல் ஜெட் விமானங்களும் பிரான்ஸ் அரசிடம் இருந்து மட்டும் தான் வாங்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க பிரான்ஸில் தான் தயாரிக்கப்படுகிறது. இதில் ஒரு விமானம் கூட இந்தியாவில் தயாரிக்கப்படப்போவது இல்லை. அதனை ரிலையன்ஸ்சும் தயாரிக்கவில்லை, HAL நிறுவனமும் தயாரிக்கவில்லை. ஒருவேளை, அதிகப்படியான ரபேல் ஜெட் விமானங்கள் தேவைப்பட்டால், வருங்காலத்தில் இந்தியா தயாரிக்கும். ஆனால் அதற்கென்று தனி ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது


Reliance Defence எனும் ரபேல் ஒப்பந்தத்தை பெற்றிருக்கும் நிறுவனம் Pipavav Defence என்ற நிறுவனத்தை ரிலையன்ஸ் குழுமம் வாங்கிய பிறகு உருவாக்கப்பட்ட நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. Pipavav Defence நிறுவனம் இதற்கு முன்னர் ராணுவ தளவாடங்கள் உற்பத்தியிலும், இந்திய கடற்படைக்கு தயாரிப்புகளை அளிப்பதிலும் அனுபவம் மிக்கது. இந்திய பாதுகாப்பு துறை சமீபத்தில் தனியாருக்கு தொழில் துறைக்கு முதலீடுகளை உருவாக்கியது. இதனை தொடர்ந்து இத்துறையில் அனுபவம் மிக்க நிறுவனங்கள் உதிரி பாகங்களை சப்பளை செய்ய அனுமதிக்கப்பட்டன. ஆனால் முழு தளவாட தயாரிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்த போதே Medium Multi-Role Combat Aircraft ஏலத்தின் போது குறிப்பிடப்பட்டது.


தற்போது ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெறவில்லை என்று இந்தியாவிற்கான பிரான்ஸ் தூதர் Alexandre Ziegler தெரிவித்திருக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், பிரான்சின் டசால்ட் விமான தயாரிப்பு நிறுவனம், இந்தியாவிற்கு புதிது அல்ல என்றும், ஏற்கனவே பல ஆண்டுகளாக போர் விமானங்களை தயாரித்து அளித்திருப்பதன் அடிப்படையிலே, ரபேல் போர் விமான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருந்தை அனைவரும் கவனிக்க வேண்டும் என்றும் பிரான்ஸ் தூதர் சுட்டிக்காட்டியிருக்கிறார். எனவே, ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை, காமாலை கண் கொண்டு பார்க்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News