Top
undefined
Begin typing your search above and press return to search.

இங்கே பிரிவினைவாதத்திற்கு இடம் தருபவர்களை ஆதரிக்க கூடாது : ஓவைசிக்கு எதிராக யோகி ஆதித்யநாத் அதிரடி பேச்சு

இங்கே பிரிவினைவாதத்திற்கு இடம் தருபவர்களை ஆதரிக்க கூடாது : ஓவைசிக்கு எதிராக யோகி ஆதித்யநாத் அதிரடி பேச்சு

SG SuryahBy : SG Suryah

  |  4 Dec 2018 8:54 PM GMT





இந்தியா தனது தந்தை நாடு என்றும், இங்கிருந்து வெளியேறுமாறு யாரும் தன்னை வற்புறுத்த முடியாது என்றும் ஐதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.


தெலங்கானாவின் தண்டூர் என்னுமிடத்தில் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசினார். அப்போது தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், ஐதராபாத்தில் இருந்து நிசாம் தப்பி ஓடியதைப் போல ஓவைசியும் ஓடிவிடுவார் எனத் தெரிவித்தார். ஐதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இதற்குப் பதிலளித்த ஓவைசி, இந்தியா தனது தந்தை நாடு என்றும், இங்கிருந்து வெளியேறுமாறு யாரும் தன்னைக் கட்டாயப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.


அடுத்ததாக ஹைதராபாத்தில் கோஷாமஹால் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் ராஜா சிங் லோத்துக்கு ஆதரவாக யோகி ஆதித்யநாத் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “ராஜா சிங்குக்கு பிரசாரம் மேற்கொள்வதற்காக நான் வந்துள்ளேன். காரணம், அவர் ஹைதராபாத்தை பாக்யநகராக பெயர் மாற்றுவதற்கான பணியை மேற்கொண்டு வருகிறார்.


ஹைதராபாத் பாக்யநகராக மாறவேண்டும் என்றால், தெலுங்கானாவில் பா.ஜனதா ஆட்சி அமைக்க நீங்கள் ஆதரவளிக்க வேண்டும். இங்கே பிரிவினைவாதத்திற்கு இடம் தருபவர்களை ஆதரிக்க கூடாது” என்று கூறினார். மேலும் “நல்லாட்சி மற்றும் வளர்ச்சியின் மூலம் இந்தியாவை ராம ராஜ்ஜியத்தின் படி கட்டமைப்பதற்கான பொறுப்பை பா.ஜனதா ஏற்றுள்ளது. இதில், தெலுங்கானாவும் பங்களிக்கவேண்டும். பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு, தெலுங்கானா தனி மாநிலமாக உருவான தினத்தை கொண்டாடும்” என்றும் கூறினார்.





Next Story