Top
undefined
Begin typing your search above and press return to search.

₹2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அபகரிப்பு விவகாரம் : உச்ச நீதிமன்ற உத்தரவால் சோனியா, ராகுலுக்கு நெருக்கடி

₹2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அபகரிப்பு விவகாரம் : உச்ச நீதிமன்ற உத்தரவால் சோனியா, ராகுலுக்கு நெருக்கடி

SG SuryahBy : SG Suryah

  |  4 Dec 2018 8:26 PM GMT

நேஷனல் ஹெரால்டு சொத்துக்களை அபகரித்த வழக்கில் தொடர்புடைய காங்கிரஸ் தலைவர் ராகுல், சோனியா ஆகியோரின் வருமான வரி கணக்கை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து சோனியா, ராகுலுக்கு நெருக்கடி முற்றி வருகிறது.


முன்னாள் பிரதமர் நேருவால் 1938ல் துவக்கப்பட்டது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் கீழ் இந்த பத்திரிகை உட்பட மேலும் சில பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு வந்தன. தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்ததால், 2008 ல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது. இந்நிறுவனத்திற்கு, ₹2,000 கோடி மதிப்புக்கு சொத்துக்கள் உள்ளன.


இந்த சொத்துக்களை அபகரிக்க கடந்த 2010ம் ஆண்டு தங்கள் ஆட்சியின்போது யங் இந்தியா என்ற அமைப்பை உருவாக்கி, இதில், சோனியா, ராகுல் மற்றும் அவர்களுக்கு நெருங்கிய சில காங்கிரஸ் தலைவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்தனர். அந்த பத்திரிகை நிறுவனம் காங்கிரஸ் கட்சியிடமிருந்து பெற்ற கடன் ₹90 கோடியை சாக்காக வைத்து, அதை வசூலிப்பதன் பேரில் அந்த பத்திரிகை நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் தங்களால் துவக்கப்பட்ட யங் இந்தியா அமைப்புக்கு கை மாற்றினர். இதன் மூலம் ₹2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் யங் இந்தியா அமைப்புக்கு கை மாறியது.


இதை எதிர்த்து பா.ஜ.க, மூத்த தலைவர் சுப்ரமணியன்சாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை தொடர்ந்து வருமான வரித்துறையும் நடவடிக்கையில் இறங்கியது. ராகுலின் 2011 - 12 ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கில் யங் இந்தியா அமைப்பில் ராகுலுக்கு உள்ள பங்குகள் மூலம் கிடைத்த வருவாய் ₹68 லட்சம் என முதலில் கணக்கிடப்பட்டது தவறு, அவரது வருவாய் ₹249 கோடி என கூறியது. எனவே, ராகுல், சோனியா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் 2011 - 12ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்குகளை மீண்டும் விசாரிக்க வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது.


இதை எதிர்த்து ராகுல், சோனியா சார்பில் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை சில நாட்களுக்கு முன்னர் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனை எதிர்த்து அவர்கள் கடந்த 14ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதன் மீதான விசாரணையை டிச.,4க்கு ஒத்திவைத்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் ஏகே சிக்ரி, அசோக் பூஷண், அப்துல் நசீர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வருமான வரித்துறை சார்பில், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சோனியா, ராகுலின் வருமான வரி கணக்கை ஆய்வு செய்ய நீதிமன்றம் தடை விதிக்கக்கூடாது. இந்த வழக்கை விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதிட்டார்.


இதைத் தொடர்ந்து நீதிபதிகள், ராகுல் மற்றும் சோனியாவின் வருமான வரி கணக்கை விசாரிக்க அனுமதி வழங்கினர். அடுத்த கட்ட விசாரணையை வரும் ஜனவரி 8 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சோனியா, ராகுலுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.


Inputs from Dinamalar
Next Story