Top
undefined
Begin typing your search above and press return to search.

ஜி.டி.பி குறித்து சந்தேகப்படுவதற்கு எவ்வித காரணங்களும் இல்லை : நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ்குமார்

ஜி.டி.பி குறித்து சந்தேகப்படுவதற்கு எவ்வித காரணங்களும் இல்லை : நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ்குமார்

SG SuryahBy : SG Suryah

  |  4 Dec 2018 8:45 PM GMT

ஜி.டி.பி எனப்படும் பொருளாதார வளர்ச்சிக் குறியீடு தொடர்பான சர்ச்சையில், நிதி ஆயோக் அமைப்பை குறைகூறுவது ஏற்கத்தக்கது அல்ல என்று அதன் துணைத் தலைவர் ராஜீவ்குமார் கூறியுள்ளார். ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி என்பதன் சுருக்கமான ஜி.டி.பி, பொருளாதார வளர்ச்சியின் அளவைக் குறிக்கும் குறியீடாகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தின் முதல் 4 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் 8.1 சதவீதம் இருந்ததாக மதிப்பிடப்பட்டிருந்தது.
2009 முதல் 2014 வரையிலான அடுத்த 5 ஆண்டுகளில் ஜி.டி.பி 7 சதவீதமாக இருந்ததாகவும் மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் புதிய அளவுகோல்களின் அடிப்படையில் பொருளாதார வளர்ச்சியை கணக்கிட்டு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் கீழ் 9 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 6.7 சதவீதமாக இருந்தது என மத்திய புள்ளியியல் அலுவலகம் அறிவித்தது.
இந்த கணக்கீட்டின் நம்பகத்தன்மை குறித்து சர்ச்சைகள் எழுந்த நிலையில், இதில் நிதிஆயோக் அமைப்பின் பங்கு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில், புதிய ஜி.டி.பி கணக்கீட்டை அரசியல் சாராத வல்லுநர்களே செய்ததாகவும், வெளியிடுவதற்கு முன்னர் சரிபார்க்குமாறு தங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது என்று நிதிஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.
பின்பற்றப்பட்ட முறைகளிலும், விவரங்களிலும் குறைகள் இருந்தால், அதை திருத்திக் கொள்ள அரசு தயாராகவே இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கணக்கீடு சரியானது என்பதோடு மேம்படுத்தப்பட்டது என்றும், அது குறித்து சந்தேகப்படுவதற்கு எவ்வித காரணங்களும் இல்லை என்றும் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.
Next Story