Top
undefined
Begin typing your search above and press return to search.

செயற்கை மழையை பெய்ய வைத்தாவது தமிழக குளங்களை நிரப்பி தாமரையை மலர செய்வோம் : ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி

செயற்கை மழையை பெய்ய வைத்தாவது தமிழக குளங்களை நிரப்பி தாமரையை மலர செய்வோம் : ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி

SG SuryahBy : SG Suryah

  |  4 Dec 2018 8:33 PM GMT

தமிழகத்தில் செயற்கை மழை பெய்ய வைத்து குளங்களை நிரப்பியாவது தாமரையை மலர வைப்போம் என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மு.க. ஸ்டாலினுக்கு பதில் அளித்துள்ளார்.
மேகதாது அணை விவகாரம் குறித்து திருச்சியில் திமுக தலைமையில் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
, "தமிழகத்தில் தண்ணீர் இல்லைபுல்கூட முளைக்காத சூழலில்தாமரை மலர்ந்துவிடுமா? " எனப் பேசினார்.
இதற்கு தனது ட்விட்டரில் விளக்கமளித்துள்ள தமிழிசை, "இனி மழை காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும். குளம் நிறையும். தாமரை மலரும். இது செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம். ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வர வைத்தாகிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரை மலர செய்வோம். காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும்" எனப் பதிவிட்டுள்ளார்.
Next Story