Top
undefined
Begin typing your search above and press return to search.

காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு மோசடிகள் செய்து தப்பி சென்ற விஜய் மல்லையா : மக்கள் பணத்தை மீட்டெடுக்கும் மோடி சர்க்கார்

காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு மோசடிகள் செய்து தப்பி சென்ற விஜய் மல்லையா : மக்கள் பணத்தை மீட்டெடுக்கும் மோடி சர்க்கார்

SG SuryahBy : SG Suryah

  |  5 Dec 2018 5:52 PM GMT







காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு மோசடிகளை செய்துவிட்டு, சட்டத்திற்கு உட்பட்டு வெளிநாடுகளுக்கு தப்பி சென்ற மோசடியாளர்களை இந்தியாவிற்கு நாடு கடத்தும் முயற்சியில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் பலனாக வங்கிகளில் பெற்ற அனைத்து கடனையும் திருப்பி செலுத்த தயார் என்று விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.



நான் பொதுத்துறை வங்கிகளின் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்ட குற்றவாளி என அரசியல்வாதிகளும், ஊடகங்களும் உரத்த குரலில் கூறி வருகின்றனர். இவை அனைத்தும் தவறானவை. கடன் தொகையை செலுத்த கர்நாடக ஐகோர்ட்டு முன் ஒப்புக் கெண்டேன். அதன் பிறகும் என்னை நேர்மையான முறையில் நடத்த மறுப்பது வேதனை அளிக்கிறது. விமான எரிபொருள் விலை ஏற்றத்தின் காரணமாகவே எனது கிங் பி‌ஷர் விமான நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியது. கச்சா எண்ணெய் விலை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு பேரல் 140 அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்ந்ததால் கிங் பி‌ஷர் விமான நிறுவனம் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிட்டது.



நஷ்டம் அதிகமானதால் வங்கியில் பணம் பெற வேண்டி வந்தது. தற்போது நான் கடன் பெற்ற அசல் தொகையில் 100 சதவீதத்தையும் திரும்ப செலுத்த தயாராக இருக்கிறேன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் மிகப்பெரிய மதுபான ஆலை குழுமத்தை நடத்தியிருக்கிறேன். மாநில அரசுகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை வரியாக அளித்து இருக்கிறேன். கிங்பி‌ஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் மாநிலங்களில் நல்லதொரு வருவாயை தந்துள்ளது. ஆனால் துரதிருஷ்டவசமாக விமான நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது. இருந்தாலும் தற்போது வங்கிகளுக்கு நான் பெற்ற கடன் தொகையை செலுத்த தயாராக இருக்கிறேன். அதனால் நஷ்டம் எதுவும் இல்லை.
என்னை இந்தியாவுக்கு அழைத்து வர வேகமாக தீவிரம் காட்டப்படுகிறது. இது ஒரு சட்டப் பிரச்சினை. ஆனால் அதில் மிக முக்கியமானது மக்கள் பணம் தான். அதை 100 சதவீதத்தையும் முழுமையாக திரும்ப தருவதாக கூறுகிறேன். வங்கிகளும், அரசும் அதை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகோள் விடுக்கிறேன். நான் திரும்ப தரும் தொகையை ஏற்க மறுப்பது ஏன்?” என தெரிவித்துள்ளார்.






Next Story