Top
undefined
Begin typing your search above and press return to search.

ஒரே நாடு, ஒரே மக்கள் என்பதை உணர்த்த கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு உதவிசெய்யுங்கள்: நடிகர் அமிதாபச்சன் வேண்டுகோள்

ஒரே நாடு, ஒரே மக்கள் என்பதை உணர்த்த கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு உதவிசெய்யுங்கள்: நடிகர் அமிதாபச்சன் வேண்டுகோள்

SG SuryahBy : SG Suryah

  |  5 Dec 2018 6:35 PM GMT





ஒரே நாடு , ஒரே மக்கள் என்பதை நிரூபிக்கும் நேரம் இந்த நேரம். எனவே நம்மைப் போன்றவர்கள் கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு நிதியுதவி செய்யவேண்டும் என்று பிரபல நடிகர் அமிதாப் பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விடியோவில் கூறியதாவது:
கஜா புயல் பாதிப்பால் டெல்டா பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவுக்கு அதிக வருமானத்தைத் தரும் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாகப் பலர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. அவர்களுக்கு மாநில அரசும் மத்திய அரசும் உதவ முன்வந்துள்ளன. ஆனால் நம்மைப் போன்றவர்களும் மனிதத்தன்மையுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும். ஒரே தேசம்ஒரே மக்கள் என்பதே இந்தியாவின் ஒற்றுமை. நம் சகோதரத்துவத்தை உணர்த்தும் நேரம் இது. மக்கள்கஜா புயலால் நேர்ந்த பாதிப்புகளிலிருந்து மீண்டுவர உதவி செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 



Next Story