Top
undefined
Begin typing your search above and press return to search.

அண்ணல் அம்பேத்கரின் 62-வது நினைவு தினம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி புகழஞ்சலி!

அண்ணல் அம்பேத்கரின் 62-வது நினைவு தினம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி புகழஞ்சலி!

SG SuryahBy : SG Suryah

  |  6 Dec 2018 7:17 AM GMT

அண்ணல் அம்பேத்கர் சட்ட மேதை மட்டுமல்ல. சிறந்த அரசியல் மற்றும் சமூக சிந்தனையாளர். சுதந்திரம் பெற்ற பின்பு நமது நாடு எந்த பாதையில் செல்ல வேண்டும் என்று விரும்பி அவர் அளித்த அரசியல் சட்ட திட்டங்கள் அனைத்து பிரிவு மக்களுக்கும் ஒரு அதிகாரப்பகிர்வை அளித்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. தாழ்த்தப்பட்ட மக்கள் மேம்படும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டு சலுகைகள் அம்பேத்கர் பெயர் நினைவிருக்கும் வரை தொடரும் என ஏற்கனவே நமது பாரத பிரதமர் அவர்களும் உறுதி கூறியிருந்தார். இன்று தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமன்றி, இதர பிற்படுத்தப்பட்ட, நலிந்த பிரிவினரும் கல்வியில் மேம்பட்டு வருகின்றனர்.

சாதாரண மக்களும் அரசியல் மூலமாக பதவியையும் அந்தஸ்தையும் பெற சட்டத்தின் மூலம் வழி ஏற்படுத்திய அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் மட்டுமன்றி, அனைவருக்கும் பொதுவானவர். அவரின் 62-வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்களும் கலந்து கொண்டனர்.  
Next Story