Top
undefined
Begin typing your search above and press return to search.

நாட்டின் முதல் நீளமான பாலம்,ஆசியாவின் இரண்டாவது நீளமான பாலம் : நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

நாட்டின் முதல் நீளமான பாலம்,ஆசியாவின் இரண்டாவது நீளமான பாலம் : நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

SG SuryahBy : SG Suryah

  |  5 Dec 2018 7:03 PM GMT





அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களை இணைத்து பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே கடந்த 16 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த நாட்டின் மிக நீண்ட பாலத்தை பிரதமர் மோடி வரும் 25-ம் தேதி திறந்து வைக்கிறார்.
அசாமின் திப்ரூகார் முதல் அருணாச்சல பிரேதசத்தின் பசிகாட் வரை போகிபீல் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் 25 ஆம் தேதி இந்த பாலத்தை பிரதமர் மோடி செயல்பாட்டுக்காக திறந்து வைக்கிறார். இந்த பாலம் பிரம்மபுத்திரா நதியின் மேலே சுமார் 32 கி.மீ செல்கின்றது. அசாமன் திப்ரூகரில் இருந்து அருணாசலப் பிரதேசத்தின் போகிபீல் வரை செல்வதற்கு தற்போது 500 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும். இருபகுதிக்கும் இடையே ஓடும் பிரம்மபுத்திரா ஆற்றின்


குறுக்கே பாலம் கட்டினால் பயண தூரம் 100 கிலோ மீட்டர் வரை குறையும். இது மட்டுமின்றி சீனா எல்லை அருகே உள்ள இந்த பகுதியில் பாலம் அமைப்பதால் ராணுவ தளவாடங்கள் உள்ளிட்டவற்றை வெகுவிரைவாக எடுத்துச் செல்ல முடியும். ஆனால் பிரவாகம் எடுத்து ஓடும் பிரம்மபுத்திராவின் குறுக்கே பாலம் கட்டுவது சவாலான பணியாகும். போகிபீல் பகுதியில் பாலம் கட்டும் இந்த பணிக்கு தேவகவுடா பிரதமராக இருந்தபோது 1997-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.



எனினும் வாஜ்பாய் பிரதமராக பதவியேற்றபிறகு பணிகள் தொடங்கின. 4.94 கிலோ மீட்டர் கொண்ட போகிபீல் பாலம், மூன்று வழி சாலையும், கீழ் பகுதியில் இரண்டு வழி ரயில் பாதையுடன் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. சுமார் 16 ஆண்டுகாலம்  இந்த பணிகள் நடந்து வந்தன.
கடந்த 16 ஆண்டுகள் நடைபெற்று வந்த பணிகள் முடிவுக்கு வந்து, கடந்த 3 ஆம் தேதி முதல் முறையாக ரயில் இயக்கப்பட்டு சோதிக்கப்பட்டது. இந்த பாலத்தை பிரதமர் மோடி வரும் 25-ம் தேதி முறைப்படி திறந்து வைக்கிறார். இந்த பாலம் நாட்டின் முதல் நீளமான பாலமும், ஆசியாவின் இரண்டாவது நீளமான பாலமும் ஆகும்.





Next Story