Top
undefined
Begin typing your search above and press return to search.

சாட்சிகளை பாதுகாக்கும் மோடி சர்க்காரின் வரைவு திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல்: இனி சாட்சிகள் யாருக்கும் பயப்படாமல் வழக்கு விசாரணைகளில் உதவலாம்

சாட்சிகளை பாதுகாக்கும் மோடி சர்க்காரின் வரைவு திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல்: இனி சாட்சிகள் யாருக்கும் பயப்படாமல் வழக்கு விசாரணைகளில் உதவலாம்

SG SuryahBy : SG Suryah

  |  6 Dec 2018 5:12 PM GMT

இந்தியாவில் நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் மிகவும் முக்கியமானவர்கள் சாட்சிகள். இவர்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லாததால் சாட்சி சொல்ல முன் வருவதில்லை. மேலும் மிகப்பெரிய வழக்குகளில் மிரட்டலுக்கு பயந்து தாங்கள் ஏற்கனவே கூறியதை மாற்றிக் கூறி பல்டி அடித்து விடுவதால் வழக்குகள் தள்ளிப் போய் விடுகின்றன. அல்லது நீதி காண முடியாமல் வழக்குகள் முடித்து வைக்கப்படுகின்றன. பல வழக்குகளில் சாட்சிகள் அச்சுறுத்தப்படுவதுமின்றி, அவர்களின் உயிருக்கும், குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இந்த நிலையில் பாலியல் பலாத்காரம் வழக்கில் சிக்கிய, சாமியார் ஆசாராம் வழக்கில், சாட்சியம் அளித்தவர்கள் மாயமானது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, 'சாட்சியம் அளிப்போருக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதற்கான நடைமுறைகளை உருவாக்க வேண்டும்' என பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்துக்கான வரைவு திட்டம், உச்ச நீதிமன்றத்தில் மத்திய மோடி அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சில திருத்தங்களுடன், அதற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 'சாட்சிகள் பாதுகாப்பு தொடர்பாக சட்டம் அமல்படுத்தப்படும் வரை, இந்த வரைவு திட்டத்தை அனைத்து மாநிலங்களும் செயல்படுத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாட்சிகளுக்கு, போதிய பாதுகாப்பு அளிக்கும் திட்டம், அமெரிக்கா, சீனா, கனடா உட்பட, பல நாடுகளில், நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story