Top
undefined
Begin typing your search above and press return to search.

சோ ராமசாமி மறைந்த இரண்டாம் ஆண்டு தினத்தில் அவருக்கு ஒரு நினைவஞ்சலி!

சோ ராமசாமி மறைந்த இரண்டாம் ஆண்டு தினத்தில் அவருக்கு ஒரு நினைவஞ்சலி!

SG SuryahBy : SG Suryah

  |  7 Dec 2018 11:32 AM GMT

நாடகாசிரியர், நடிகர், துக்ளக் பத்திரிகை ஆசிரியர், வழக்குரைஞர், அரசியல் ஆலோசகர் போன்ற பல துறைகளில் பன்முகத் தன்மை கொண்ட பண்பாளர் சோ ராமசாமி .உடல்நலக் குறைவால் சென்னையில் 2016 டிசம்பர்-7 அன்று அதிகாலை தனது 83-ஆம் வயதில் காலமானார். அவரின் 2-வது நினைவு நாளில் அவர் மீது இன்றளவும், பற்றும், பாசமும், நன்றியுணர்வும் கொண்டவர்களால் நினைவு கூற முடியாமல் இருக்க முடியாது.
தமிழகத்தில் ராமசாமி என்றால் யாருக்கும் தெரியாது. ஆனால் சோ என்றால் எல்லோருக்கும் தெரியும். அந்த ஒற்றை எழுத்தில்தான் எத்தனை பன்முகங்கள் பளிச்சிட்டன. அவரைப்பற்றியும், இந்திய அரசியலில் அவர் ஆற்றிய பணிகள் பற்றியும் அவருடன் நெருங்கிப் பழகியவர்களும், ஊடக துறையை சேர்ந்தவர்களும் தெரிவித்த பல கருத்துக்களின் ஒரு பகுதி இங்கே  தரப்பட்டுள்ளது. எதற்கும் அஞ்சாமல், தான் சரி என்று நினைப்பதை தைரியமாக தனது துக்ளக் பத்திரிகையில் எழுதியவர். தனது நேர்மையை என்றும், எப்போதும், யாருக்காகவும் அடகு வைக்காதவர். மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி அரசியல் குழப்பங்கள் தோன்றிய காலங்களில் சுயநலத்துக்கு அப்பாற்பட்டு எத்தகைய முடிவை குடிமகன்கள் எடுக்க வேண்டும் என்பதை பூடகமாக சுட்டிக்காட்டியவர். அவர் தன்னை ஒரு முழுமையான அரசியல்வாதியாக காட்டிக் கொண்டதில்லை. என்றாலும், தொடக்கத்தில் ஜனதா, பிறகு பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளராக இருந்தார் என்று கூறுவதைவிட ஒரு வழிகாட்டியாக இருந்தார் என்றும் கூறலாம்.
எதிரிகள் கூட அவரை நம்பி வந்து அவரிடம் யோசனை கேட்டாலும் நாட்டு நன்மையை விட்டுக் கொடுக்காமல் தகுந்த யோசனைகளை சொல்வார். இந்திரா காந்தியின் அவசரநிலையை எதிர்த்து அஞ்சாமல் போராடி அவருக்கெதிரான வட நாட்டு தலைவர்களை ஓன்று திரட்டி ஜனதா அரசு அமைத்தது, பதவிக்காக ஆசைப்பட்டு வி.பி.சிங் பிரிவினைவாதிகளுடன் சேர்ந்து மீண்டும் ஆட்சி அமைக்க முயன்றபோது அதை தடுத்து இடைக்காலத்தில் தனது நண்பரான சந்திரசேகர் ஆட்சி அமைக்க உதவியது, காங்கிரசால் N.T.ராமாராவ் ஆட்சி கவிழ்கப்பட்டபோது அதை எதிர்த்து போராடியது, 1985-ஆம் ஆண்டில் ஷா பானு வழக்கில் இராஜீவ் அரசு முஸ்லிம்களுக்கு மட்டுமே ஆதரவான ஒரு முடிவை எதிர்த்த போது அதை எதிர்த்து போராடியது, முந்தைய ஜன சங்கத்தை பாரதிய ஜனதாவாக மாற்றி வெற்றிப்பாதையில் திருப்பியது, தொடக்கத்தில் ராஜீவின் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு இலங்கை உட்பட பல விஷயங்களில் ஆலோசனை அளித்தது, ராஜீவின் முடிவுகளால் ஏற்பட்ட குழப்பங்கள், ராஜீவின் மறைவையடுத்து ஏற்பட்ட குழப்பங்கள், எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு ஏற்பட்ட குழப்பங்கள் போன்ற நாட்டின் அவசர காலகட்டங்களில் அவர் வெளிப்படுத்திய அரசியல் சாணக்கியத்தனம் இந்த தேசத்துக்கு மிகவும் பயனுள்ளவை. தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க, தி.மு.க இரண்டு கட்சிகளையும் கடுமையாக விமர்சிப்பார். ஜெயலலிதா தனது தோழியாக இருந்தாலும் கூட தனது பத்திரிக்கையில் அவருடைய அரசியல் செயல்பாடுகளை கடுமையாக சாடுவார். இரண்டு கட்சிகளையுமே சாடுகிறீர்களே யாருக்குத்தான் நாங்கள் வாக்களிப்பது என்று அவருடைய வாசகர்கள் கேள்வி கேட்பார்கள். அப்போது இரண்டு திருடர்களில் எந்த திருடன் நல்ல திருடன் என உங்கள் மனம் கூறுகிறதோ அவர்களுக்கு வாக்கு அளியுங்கள் என்று நகைச்சுவையாக பதில் கூறுவார்.    .
நேர்மையான அணுகுமுறைகள், தேச பற்று மூலம் பகைவர்களின் மத்தியில் கூட மதிப்புள்ளவராக வலம் வந்தார். எத்தனையோ பிரதமர்கள் அவருக்கு நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். முதல்வர்கள் அவருக்கு சிஷ்யர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், கடைசி வரையில் யாரையும் தனது சுய முன்னேற்றத்துக்காகவோ அல்லது தனது தொழில் முன்னேற்றத்துக்காகவோ பயன்படுத்திக் கொண்டதில்லை. பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளையும், குறிப்பாக நமது பிரதமர் மோடியையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்காதவர். பா.ஜ.க-வால் இரண்டு முறை ராஜ்ய சபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டும், அப்பதவி மூலம் கிடைக்கும் பலன்களை கட்சிக்கும் அப்பாற்பட்டு, வெகு தொலைவிலுள்ள அரசு பள்ளிகள் வளர்ச்சிக்காக செலவு செய்தவர். ஒரு நடுத்தர எளிமையான வாழ்கையை விரும்பி வாழ்ந்தவர். ஒரு நேர்மையான குடிமகனுக்கு உதாரணமாக வாழ்ந்துவிட்டு சென்றார். இப்படியாக நாட்டு நலனை அடிப்படையாகக் கொண்டே அமைந்த அவருடைய சிந்தனைகள் நாட்டின் குழப்பமான சூழ்நிலைகளிலும் மக்களுக்கு கை கொடுத்தன. பாண்டவர்களுக்கு உதவிய கண்ணன் போல அரசியலில் குழப்பம் ஏற்பட்ட சூழல்களில் இந்த பாரதத்துக்கு அவர் உதவினார், வழிகாட்டினார் என்பதை தமிழக மக்கள் மட்டுமல்ல இந்த பாரதத்தில் உள்ள அனைத்து அறிஜீவிகளுக்கும் இது நன்றாக தெரியும். இணையில்லாத அந்த ஆத்மாவுக்கு, கதிர் பத்திரிக்கையின் சார்பில் இதயபூர்வமான அஞ்சலியை செலுத்துகிறோம்.
Next Story