Top
undefined
Begin typing your search above and press return to search.

கும்பகோணத்தில் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட டில்லியை சேர்ந்த பெண் - குற்றவாளிகளுக்கு ஆஜராக கும்பகோணம் வக்கீல்கள் மறுப்பு!

கும்பகோணத்தில் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட டில்லியை சேர்ந்த பெண் - குற்றவாளிகளுக்கு ஆஜராக கும்பகோணம் வக்கீல்கள் மறுப்பு!

SG SuryahBy : SG Suryah

  |  7 Dec 2018 7:30 PM GMT

கும்பகோணத்திற்கு கடந்த 2-ஆம் தேதி நள்ளிரவு டெல்லியை சேர்ந்த 25 வயது இளம்பெண் வங்கி பணிக்காக வந்திருந்தார். அந்த பெண் வழி தெரியாமல் நின்று கொண்டிருந்த போது 4 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


டெல்லியில் தனியார் வங்கியில் 25 வயது இளம் பெண் பணியாற்றி வருகிறார். இவருக்கு கும்பகோணத்தில் உள்ள அவரது வங்கியின் தலைமை அலுவலகத்தில் பதவி உயர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடப்பதாக இருந்தது. இதில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து சென்னை வந்த அவர், கடந்த 2-ம் தேதி திருச்செந்தூர் ரெயிலில் இரவு 10.30 மணிக்கு கும்பகோணம் சென்றுள்ளார், அங்கு இரவு நேரத்தில் மழை பெய்ததால் ரயில் நிலையத்திலேயே அந்த இளம் பெண் காத்திருந்துள்ளார்.


நீண்ட நேரமாகியும் தோழிகள் வரவில்லை. இதையடுத்து ஓட்டலுக்கு செல்ல ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளார். ஆனால், ஆட்டோ டிரைவர் வேறு பாதையில் வண்டியை ஓட்டியுள்ளார். இதனால் பயந்துபோன் இளம்பெண் கதறி அழுது கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆட்டோ டிரைவர் நடுவழியில் இறக்கி விட்டு சென்றுவிட்டார். அப்போது அந்த பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த 4 இளைஞர்களிடம் ஓட்டலுக்கு செல்ல வழிகேட்டுள்ளார். அந்த இளைஞர்களில் இரண்டு பேர் தங்களது பைக்கில் அந்த பெண்ணை ஏற்றிக்கொண்டு மறைவான காட்டுப்பகுதியில் வைத்து கற்பழித்தனர். மற்ற இரண்டு நண்பர்களுக்கும் அந்த பெண் விருந்தாக்கினர். சுமார் 2 மணி நேரம், காம கொடூரர்களுடன் போராடியுள்ளார் அந்த பெண்.

இந்த நிலையில் இது குறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வசந்த், தினேஷ், அன்பரசன், புருசோத்தமன் ஆகிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி பெண், கும்பலால் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் தண்டனை கிடைக்க வேண்டும் என்று கும்பகோணத்தில் பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.


இதைத் தொடர்ந்து கும்பகோணத்தில் வக்கீல்கள், பாதிக்கப்பட்ட டெல்லி பெண்ணிற்கு ஆதரவாக கோர்ட்டு புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் யாரும் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆஜராக மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source : Maalaimalar

Next Story