Top
undefined
Begin typing your search above and press return to search.

கங்கை நதி புனரமைப்பு திட்டம்: முந்தைய அரசுகளைக் காட்டிலும் 6 மடங்கு வேகமாக செயல்படுகிறோம் ! மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

கங்கை  நதி புனரமைப்பு திட்டம்: முந்தைய அரசுகளைக் காட்டிலும் 6 மடங்கு வேகமாக செயல்படுகிறோம் ! மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

SG SuryahBy : SG Suryah

  |  7 Dec 2018 6:57 PM GMT

கங்கை நதியை சுத்தம் செய்வதில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் களைந்து, முந்தைய அரசுகள் 30 ஆண்டுகளில் செய்த பணிகளை விட மோடி சர்க்கார் 6 மடங்கு அதிகம் செய்து வருவதாக மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் கங்கை மறுசீரமைப்பு துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், “காங்கிரஸ் உட்பட முந்தைய அரசுகள் 1985 ஆம் ஆண்டு மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கு இடையே கங்கை துப்புரவுத் திட்டங்களில் ₹4,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளன. ஆனால்  தற்போதைய மோடி சர்க்கார் கடந்த நான்கு ஆண்டுகளில் 254 திட்டங்களில் ₹24,000 கோடி ரூபாய் அனுமதி அளித்துள்ளது. இந்த 254 திட்டங்களில் 133 கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள்,  11 இடங்களில் பயோமெரிடேஷன் சுத்தகரிப்பு மையம், கிராமப்புற துப்புரவு திட்டங்கள், 64 இடங்களில் அசுத்தமற்ற நீராடும் இடங்கள், 6 இடங்களில் உயிர்-பன்முகத்தன்மை மற்றும் 16 வனப்பகுதி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன", என்றார் .
கங்கை நதிக்கு 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 97 நகரங்களில் திறந்தவெளி கழிப்பிடங்கள் அறியப்பட்டு அவற்றை பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அகற்றி தூய்மை இந்தியா திட்டம் மூலம் சீரமைத்து வருவதாக  வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறினார். ஆசியாவின் பழமையான வடிகாலான சிசமுவ நாலாவில் இருந்து கங்கையில் 14 கோடி லிட்டர் கழிவுநீர் விடப்பட்டுவந்ததை தடுத்து நிறுத்துவதில் நம்முடைய பொறியாளர்கள் திறமையுடன் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர்கள் கூறினர். கங்கையை முழுமையாக சுத்தபடுத்தி புனித கங்கையாக மாற்றும் பணி திட்டமிட்ட காலத்திற்குள் முழுமையாக முடிக்கப்படும் என்றும் நேற்று அமைச்சர்கள் இருவரும் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டபோது கூறினர்.
Next Story