Top
undefined
Begin typing your search above and press return to search.

இன்னும் 3 ஆண்டுகளில் நிறைவடைய உள்ள அனைவருக்கும் வீடு திட்டத்தின் இலக்கு

இன்னும் 3 ஆண்டுகளில் நிறைவடைய உள்ள அனைவருக்கும் வீடு திட்டத்தின் இலக்கு

SG SuryahBy : SG Suryah

  |  7 Dec 2018 6:48 PM GMT

சொந்த வீடு என்பது மனித வாழ்க்கையில் பெருங்கனவு. அதிக வருவாய் ஈட்டுவோருக்குச் சொந்த வீடு கனவு எளிதாக நிறைவேறிவிடும். நடுத்தரக் குடும்பத்தினர் பெரும்பாலும் வங்கிகளில் கடன் வாங்கி சொந்த வீட்டுக் கனவை நனவாக்கிக்கொள்கிறார்கள். ஆனால், ஏழை மக்களுக்குச் சொந்த வீடு என்பதெல்லாம் கனவாக மட்டுமே இருக்கும். காலம் முழுவதும் வாடகை வீட்டிலேயே வாழக்கையை நகர்த்தும் அவர்களுக்கும் வீடு கட்டும் ஆசையை நிறைவேற்றுகிறது அனைவருக்கும் வீடு திட்டம்.
'அனைவருக்கும் வீடு’ என்பது மத்திய அரசின் திட்டம். 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் இதை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரும் வீடு கட்டலாம். அடிப்படை உரிமையான சொந்த வீட்டை ஏழை மக்களும் அடைய வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ள திட்டம். ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ (பிரதம மந்திரி குடியிருப்புக் கட்டும் திட்டம்) என்ற பெயரில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ஒரு கோடி வீடுகளைக்கட்டி முடிக்கும் இலக்கை 3 ஆண்டுகளுக்குள் எட்ட மத்திய அரசு மேலும் 1 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டுக்குள் மலிவு விலையில் அனைவருக்கும் வீடு வழங்கும் பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தை கடந்த 2015-ஆம் ஆண்டு மத்திய அரசு தொடங்கியது. தமிழ்நாடு, ஆந்திரா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வரை ஒப்புதல் அளிக்கப்பட்ட 63 லட்சம் வீடுகளில் 12 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், 23 லட்சம் வீடுகள் கட்டுமானத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் 75 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கவும் 30 லட்சம் வீடுகளை கட்டி முடிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Next Story