Top
undefined
Begin typing your search above and press return to search.

விவசாய பொருட்களின் இறக்குமதிக்கு குட் பை : ஏற்றுமதியை 2 மடங்காக்கும் கொள்கைக்கு மோடி சர்க்கார் அனுமதி

விவசாய பொருட்களின் இறக்குமதிக்கு குட் பை : ஏற்றுமதியை 2 மடங்காக்கும் கொள்கைக்கு மோடி சர்க்கார் அனுமதி

SG SuryahBy : SG Suryah

  |  7 Dec 2018 7:39 PM GMT

மோடி சர்க்கார் அமல்படுத்தி வரும் திட்டமிட்ட வேளாண் உற்பத்தி முறைகள் மூலம் விவசாய விளை பொருள்களின் உற்பத்தி தேசிய அளவில் ஆண்டுக்கு 20 சதவீதம் உயர்ந்து வருகிறது. திட்டமிட்ட உற்பத்தி மற்றும் மண்டல வாரி பயிர் சாகுபடி திட்டங்கள், நவீன காப்பீட்டு திட்டங்கள், நீர்மேலாண்மை திட்டங்கள், இயற்கை வழி வேளாண்மை போன்றவற்றில் தற்போதைய மோடி அரசு சிறப்பாக கவனம் செலுத்திவருகிறது. ஆனால்  முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு விவசாய உற்பத்தியில் சரியான கவனம் செலுத்தாததால், பருப்பு, உளுந்து,உயர் ரக அரிசி, சர்க்கரை வகைகள் ஏராளமான அளவில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அதனால் பருப்பு வகைகள் ₹120 முதல் ₹200 வரை விற்றன. சர்க்கரை கிலோ ₹50 முதல் ₹60 வரை விற்றன.


இந்த நிலையில் மோடி சர்க்கார் பதவி ஏற்றதும் விலைவாசி உயர்வை தடுக்க உணவு ஏற்றுமதியை நிறுத்தியது. அதன்பிறகு மோடி அரசு எடுத்த விவசாய அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலம் ஆண்டுக்கு 20 சதவீதம் உற்பத்தி உயர்ந்து வருகிறது.  எனவே உணவுப் பொருள் இறக்குமதியை அரசு பெருமளவில் நிறுத்திவிட்டது. அதே சமயம் உற்பத்தி ஆன விவசாய பொருள்களுக்கான இலாபம் அதிக அளவில் கிடைக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் உணவுப்பொருள்கள் ஏற்றுமதி செய்ய வர்த்தக துறையினர் அனுமதி கோரியிருந்தனர். இந்த நிலையில் விவசாய உணவுப் பொருள்கள் ஏற்றுமதியில் மத்திய மந்திரி சபை கொள்கை முடிவெடுத்து ஏற்றுமதிக்கான அனுமதி அளித்துள்ளது. இது குறித்து  மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு கூறுகையில், "2022 ஆம் ஆண்டில் விவசாய ஏற்றுமதி இரண்டுமடங்காக உயர்த்தப்பட்டு, 60 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் விவசாய ஏற்றுமதி இரட்டிப்பாக்கப்பட வேண்டுமென்பது அரசின் இலக்காகும். ஆண்டுக்கு 20 சதவீதம் பண்ணை பொருள்களின் உற்பத்தி கூடி வருகிறது. தற்போதைய ஏற்றுமதி மதிப்பீடு 30 பில்லியன் டாலர்கள் . ஏற்றுமதி செய்ய இது சரியான நேரம். அனைத்து கரிம மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்களின் ஏற்றுமதிக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்காத வகையில் இந்த கொள்கையை மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்டு அனுமதி தந்துள்ளது. இருப்பினும், வெங்காயம் போன்ற முதன்மை வேளாண் பொருட்களுக்கான ஏற்றுமதிக் கொள்கையானது விலைவாசி நிலவரத்தை பொறுத்து ஒரு குறிப்பிட்ட கால அளவை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்படும் என்றார்.

Next Story