Top
undefined
Begin typing your search above and press return to search.

வழக்குத் தொடுக்கலாம் என்ற உரிமையை தவறாகப் பயன்படுத்துவதா? : அருண் ஜெட்லிக்கு எதிரான மனுவில் உச்ச நீதிமன்றம் தாக்கு!

வழக்குத் தொடுக்கலாம் என்ற உரிமையை தவறாகப் பயன்படுத்துவதா? : அருண் ஜெட்லிக்கு எதிரான மனுவில் உச்ச நீதிமன்றம் தாக்கு!

SG SuryahBy : SG Suryah

  |  8 Dec 2018 6:14 PM GMT

ஆர்.பி.ஐ-யின் இருப்பில் உள்ள ₹9.59லட்சம் கோடியில் இருந்து மூன்றில் ஒரு பங்கை, அதாவது ₹3.6 லட்சம் கோடியை மத்திய அரசு கேட்பதாகவும், அந்தத் தொகையை வழங்க ஆர்.பி.ஐ மறுப்பதால் தான் இரு தரப்புக்கும் இடையே பிரச்னை வெடித்துள்ளதாகவும் தவறான தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இந்த விவகாரத்தை வைத்து உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர் எம்.எல்.சர்மா பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ஆர்.பி.ஐ-யின் மூலதன இருப்பைக் ‘கொள்ளையடிக்க’ நிதியமைச்சா் அருண் ஜேட்லி முயலுவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்.கே.கௌல் ஆகியோர் அடங்கிய பென்ச் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
இந்த வழக்கு எந்த விதமான பொது நல வழக்கு? இதன் நோக்கம் என்ன?நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம் என்ற உரிமையை இந்த அளவுக்கு தவறாகப் பயன்படுத்திக் கொள்ளலாமா?ஆர்.பி.ஐ மூலதன இருப்பை நிதியமைச்சா் கொள்ளையடிக்க முயலுகிறார் என்று கூறுவதில் என்ன அா்த்தம் உள்ளது. மனு தாக்கல் செய்யும் போது உச்ச நீதிமன்ற விதிகளை மதிக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியாதா? என்று கேள்வி எழுப்பி மனுவை நிராகரித்தனா். மேலும், இதே மனுதாரா் அடுத்து ஏதாவது பொதுநல வழக்குத் தொடுத்தால் அதற்கு முன்பு ₹50,000 அபராதம் கட்ட வேண்டும். அவ்வாறு கட்டவில்லை என்றால் அவர் இனி பொதுநல வழக்குத் தொடுக்க முடியாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Next Story