Top
undefined
Begin typing your search above and press return to search.

வர்த்தகர்கள் கோரிக்கையை ஏற்ற மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி : ஜி.எஸ்.டி வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

வர்த்தகர்கள் கோரிக்கையை ஏற்ற மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி : ஜி.எஸ்.டி வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

SG SuryahBy : SG Suryah

  |  8 Dec 2018 6:49 PM GMT

இந்தியா முழுவதும் பலமுனை வரித்திட்டம் முன்பு நிலவியது. இதனால் அதிக செலவு, நேரம் இழப்பு, வரி கட்டாமை நிலவி வந்தது. எனவே ஜி.எஸ்.டி என்கிற ஒற்றை வரித் திட்டம் உருவாக்கப்பட்டு நாடு முழுவதும் கடந்த 2017 ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் 2017 – 2018 ஆண்டுக்கான ஜிஎஸ்டி கணக்குகளை தாக்கல் செய்ய இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை வர்த்தகர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அகில இந்திய வர்த்தகர்கள் சங்க கூட்டமைப்பினர் சமீபத்தில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து “ ஜிஎஸ்டி புதிய திட்டம் என்பதால் இன்னும் நிறைய வர்த்தகர்கள் இது குறித்து மேலும் புரிந்துகொண்டு கணக்குகளை சமர்ப்பிக்க காலதாமதம் ஆகிறது. எனவே கால அவகாசத்தை 2019 மார்ச் வரை மேலும் 3 மாதத்துக்கு நீட்டிப்பு செய்து உதவுமாறு கேட்டுக் கொண்டனர்.


புதிய வர்த்தகர்களின் நடைமுறை பிரச்சனைகளை புரிந்து கொண்ட அமைச்சர் அருண்ஜெட்லி, அவர்களின் கோரிக்கையின்படி வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிப்பு செய்ய மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்துக்கு பரிந்துரை செய்தார். இதன்படி மேற்படி வாரியம் சலுகையை நீட்டித்து இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  அந்த அறிவிப்பில் ஜி.எஸ்.டி.ஆர்-9,  ஜி.எஸ்.டி.ஆர்-9ஏ, ஜி.எஸ்.டி.ஆர்-9சி ஆகிய கணக்குகளை தாக்கல் செய்ய வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ந் தேதிவரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story