Top
undefined
Begin typing your search above and press return to search.

வைகோ-வை வெளியே துரத்துகிறதா தி.மு.க ? : அடுத்து எங்கு செல்வாரோ என நெட்டிசன்கள் தமாஷ்

வைகோ-வை வெளியே துரத்துகிறதா தி.மு.க ? : அடுத்து எங்கு செல்வாரோ என நெட்டிசன்கள் தமாஷ்

SG SuryahBy : SG Suryah

  |  8 Dec 2018 7:06 PM GMT

பொதுவாக வயதாகும் நிலையில் பெரியவர்கள் தங்கள் பேச்சு, கோபம் ஆகியவற்றை குறைத்துக் கொள்வார்கள். மிகப்பெரிய மனிதர்கள் தங்கள் மதிப்பு, மரியாதையை குறைத்துக் கொள்ளக் கூடாது எனக் கருதி மிக குறைவான வார்த்தைகளை உதிர்ப்பார்கள். அந்த வார்த்தைகள் அதிக மதிப்புள்ளதாக பார்க்கப்படும். ஆனால் ஒருசிலர் தனக்கு வயதாவதை கருப்பு டை, நறுக்கான மீசை ஆகிய செயற்கை அலங்காரங்களின் மூலம் மறைத்துக் கொள்வதோடு சரி. மற்றபடி தனக்கு முன்புபோல பலம், இளமை உண்மையில் இருப்பதாக கற்பனை செய்து கொண்டு வளவளவென்று பேசுவார்கள். தங்கள் பேச்சில் பொருள் இருக்கிறதா என பார்க்காமல், சுயநல உணர்வுடன், பேசியதையே திரும்பத் திரும்ப பேசுவதுடன், திடீரென தங்கள் கண்ணியத்தையும் கோபத்தில் இழந்து விடுகின்றனர். தமிழக அரசியலில் இன்றைக்கு அந்த நிலையில் இருப்பவர் வைகோ என நாம் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
சமீபத்தில் அவர் அடித்த  அரசியல் பல்டிகள், முன்னுக்கு பின் முரணாக பேசுதல், பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் முன்னோடிகளை மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசுவது, தொலை காட்சி பேட்டிகளில் திடீர் கோபம் அடைதல், தொடர்பில்லாமல் பேசுவது என அவரின் போக்கை தமிழகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தநிலையில் தான் சார்ந்து இருக்கக்கூடிய கூட்டணிகுள்ளேயே குண்டு வைப்பது என்பது வைகோவிற்கு வாடிக்கையாகிவிட்டது என்று இன்றைய ஆன்லைன் பத்திரிகை ஒன்றில் செய்தி உலா வருகின்றது.
அந்த பத்திரிகை மேலும் கூறுகையில் “ தி.மு.க, அ.தி.மு.க ஆட்சிக்குவராமல் தடுக்க கடந்த சட்டசபைத் தேர்தலின்போது விஜயகாந்தை முதல்வர் வேட்பாளர் போல பிம்பம் செய்து ஒரு கூட்டணியை உருவாக்கினார் என்றும்,  கஷ்டப்பட்டு உருவாக்கிய இந்த கூட்டணியை வெற்றி பெற வைக்காமல் தேர்தல் நெருங்கிய நிலையில் தான் வேட்பாளராக நின்ற கோவில்பட்டி தொகுதியில், திடீரென தான் போட்டியிடவில்லை என்று அறிவித்தார் என்றும் அதனால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டு கூட்டணி மீதான அதிருப்தி மக்கள் மத்தியில் ஏற்பட்டது என்றும், இந்த கூட்டணியால் தி.மு.க-வின் வாக்கு வங்கி சற்று சரிந்து அந்த கட்சி வெற்றி வாய்ப்பை இழந்து மக்களிடையே அதிருப்தியில் இருந்த அதிமுக வெற்றி பெற்று விட்டதாகவும், கூட்டணிக்குள்ளேயே இருந்து கூடாத செயல்களால் தங்கள் கூட்டணிக்குள்ளேயே பாம் வைத்த அவர், இப்போது தான் வஞ்சித்த தி.மு.க-வுடன் உறவை பலப்படுத்த முயற்சி செய்து வருவதாகவும் கூறியுள்ளது.
மேலும் அந்த பத்திரிகை செய்தியில், தற்போது தி.மு.க கூட்டணியில் சேர்ந்து கொண்டு ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்று கூறி, மாண்புமிகு தலைவரே என ஸ்டாலினை அழைக்கும் வைகோ அங்கும் குழப்பத்தை ஆரம்பித்துவிட்டார் என்றும் தலித்துகளுக்கு திராவிட இயக்கம் சம உரிமை கொடுத்து உள்ளதா என்ற தொலைக்காட்சி நெறியாளர் ஒருவரின் கேள்விக்கு உரிய வகையில் பதில் அளிக்காமல், எங்கள் வீட்டில் வேலைக்கு வைத்திருக்கும் தலித்துகளிடம் நான் சமமாக பழகுகிறேன் என்று சம்பந்தமே இல்லாமல் பேசியதுடன், தேர்தல் செலவுக்கு திருமாவளவனுக்கு ₹30 லட்சம் நான் கொடுத்தேன் என்றும் பேசியுள்ளார். இவை, அனைத்துமே விடுதலை சிறுத்தைகளின் தன்மானத்தை சீண்டிய செயல்களாகும் என்று கூறும் அந்த பத்திரிகை மேலும் கூறுகையில் அருவருக்கத்தக்க இந்த வைகோவின் செயல்பாடுகளை தி.மு.க எப்படி பொறுத்துக் கொள்கிறது என பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் கேள்வி கேட்பதாகவும், தி.மு.க-வும் சரியில்லையோ என்ற தோற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இப்படி எல்லாம் நடக்கும் என்று தி.மு.க மூத்த தலைவர்களும் அறிந்துதான் வைத்துள்ளனர் என்றும், சில தினங்களுக்கு முன்பு தி.மு.க கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா தொலைக்காட்சி டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது, ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் தி.மு.க கூட்டணியில் இருக்கின்றதா என்று அறிவிப்பதில் அவசரம் கிடையாது என்றும், தேர்தல் நெருங்கும்போது சேர்ப்பதா, வேண்டாமா என்பதை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியதாகவும், அந்த பத்திரிக்கை கூறியுள்ளது. விஜயகாந்த் பட்ட பாட்டை பார்த்து திமுக தெளிவடைந்து விட்டதாகவும்,  அதனால் தான் கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக வைகோ அறிவாலயத்தில் இருந்து துரத்தப்படுவதாகவும் அடுத்து என்ன செய்வார் என்பதே இப்போது அரசியலில் குறிப்பாக சமூக ஊடகங்களில் கலாய்க்கப்படும் கேள்வியாக உள்ளதாகவும் அந்த பத்திரிகை கூறியுள்ளது.
அதே சமயம் புலிகளையும், ஈழத்தமிழர்களையும் கொன்று குவித்தவர்கள் ராஜபக்ஷே மட்டுமல்ல, தி.மு.க-வும், காங்கிரசும் சேர்ந்து தான் அந்த மாபெரும் துரோகத்தை செய்துவிட்டார்கள் என தொண்டை கிழிய கத்தி வந்த இந்த வைகோ தற்போது காங்கிரசையும், தி.மு.க-வையும் ஓஹோவென்று புகழ்ந்து பேசுகிறார். ஆனால் தன்னால் இயன்றவரை ஈழத்தமிழர்களுக்கு நன்மை செய்து வரும் எந்த ஒரு பாவமும் அறியாத பிரதமர் மோடியை அவன், இவன் என நாகரீகம் இல்லாமல் பேசி வரும் வைகோ இன்னமும் அவமானப்பட வேண்டும், செல்லாக் காசாக போக வேண்டும் என பா.ஜ.க-வுக்கு ஆதரவாகவும் சமூக ஊடகங்களில் சிலர் பதிவிடுகின்றனர். பிறரை நாவினால் சுடும் புண்கள் தன்னையே சுட்டுக் கொள்ளும் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
Next Story