Top
undefined
Begin typing your search above and press return to search.

இனி இந்தியாவில் கடனை வாங்கிவிட்டு வெளிநாடுகளில் பதுங்க முடியாது - நிரந்தரமாக முடக்கும் பிரதமரின் திட்டம்

இனி இந்தியாவில் கடனை வாங்கிவிட்டு வெளிநாடுகளில் பதுங்க முடியாது - நிரந்தரமாக முடக்கும் பிரதமரின் திட்டம்

SG SuryahBy : SG Suryah

  |  8 Dec 2018 7:30 PM GMT

பொருளாதார குற்றவாளிகள் இனி உலகின் எந்த நாட்டிற்கும் ஓடி ஒளிந்து கொள்ள முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.டெல்லியில் தனியார் செய்தி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பொருளாதார குற்றம் இழைத்து விட்டு தப்பி ஓடியவர்களை தாயகத்திற்கு கொண்டு வந்து விசாரிக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.இந்தியாவில் இருந்து தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் வெளிநாடுகளில் பாதுகாப்பாக பதுங்க முடியாது என்றும் அவர்கள் இந்தியா கொண்டுவரப்படுவார்கள் என்றும்  தெரிவித்துள்ளார்.டெல்லியில் ஜாக்ரன் ஊடக குழுமம் சார்பில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
இந்தியாவில் பொருளாதாரக் குற்றங்களைச் செய்துவிட்டு, இந்தியாவில் இருந்து தப்பி வெளிநாடுகளில் பதுங்கி உள்ளவர்கள் அந்த நாடுகளில் பாதுகாப்பாக இருக்க முடியாது.


அவர்கள் இந்தியா கொண்டுவரப்படுவார்கள். அதற்கான முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது. அர்ஜென்டினாவில் நடந்த ஜி20 நாடுகள் மாநாட்டின்போது, பொருளாதாரக் குற்றவாளிகளுக்கு இடம்தரக் கூடாது என்ற இந்தியாவின் நிலைப்பாடு அந்த நாடுகளிடம் வலியுறுத்தப்பட்டது. இந்தியாவின் கோரிக்கைக்கு நல்ல முடிவு கிடைக்கும்.மேலும் ஜி-20 மாநாட்டின் போது, இந்த பிரச்சனையை முன்னிருத்தி 9 அம்ச திட்டத்தை தாம் முன்வைத்ததை அவர் சுட்டிக் காட்டினார்.


இந்த திட்டத்தை சர்வதேச நாடுகள் ஏற்றுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார். நாட்டில் வறுமையை ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பெரிய குடும்பப் பெயர்களுடன் ஆட்சிக்கு வந்தவர்கள், மக்களின் வறுமையைப் போக்க எந்த தீர்வையும் காணவில்லை. மக்களின் வறுமையை வைத்து அவர்கள் ஓட்டு வங்கி அரசியல் நடத்தினர். வறுமையை ஒழித்துவிட்டால் அதன்பிறகு எப்படி ‘வறுமையை ஒழிப்போம்’ என்று கோஷமிட முடியும். அது அவர்களின் ஓட்டு வங்கியை பாதிக்கும். எனவே, வறுமையை ஒழிப்பதில் அவர்கள் அக்கறை காட்டவில்லை.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். வங்கிகளில் கோடிக்கணக்கில் பண மோசடி செய்து வெளிநாட்டில் இருக்கும் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹூல் சோக்சி ஆகியோரை இந்தியா கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. பல்வேறு நாடுகளில் ஒளிந்துள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்த மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்குமென மோடி தெரிவித்தார்.


Source : The Hindu, Thanthi TV
Next Story