Top
undefined
Begin typing your search above and press return to search.

பாஸ்ட் புட் உரிமையாளரின் கழுத்தில் பட்டா கத்தியை வைத்து பணம் பறித்த தி.மு.க பிரமுகர் - தமிழகம் முழுவதும் வன்முறை வெறியாட்டத்தில் தி.மு.கவினர்

பாஸ்ட் புட் உரிமையாளரின் கழுத்தில் பட்டா கத்தியை வைத்து பணம் பறித்த தி.மு.க பிரமுகர் - தமிழகம் முழுவதும் வன்முறை வெறியாட்டத்தில் தி.மு.கவினர்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  10 Dec 2018 5:22 PM GMT

பாஸ்ட் புட் உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ₹20 ஆயிரம் பணம் பறித்த தி.மு.க பிரமுகர் உட்பட 4 பேரை கைது செய்தனர் போலீஸ் மேலும் 2 பேருக்கு வலைவீச்சு.
திருச்சி உறையூர் சாலை ரோட்டில் பாஸ்ட் புட் கடை நடத்தி வருபவர் சுகுமாரன். நேற்று முன்தினம் இரவு கடையில் இருந்த போது, ஒரு கும்பல் காரில் வந்து இறங்கியது. அந்த கும்பல் சுகுமாரானின் கழுத்தில் பட்டா கத்தியை வைத்து கொலை செய்து விடுவேன் என மிரட்டி ₹20 ஆயிரம் ரூபாயும் அவர் கட்டியிருந்த கைக்கடிகாரத்தையும் பறித்து சென்றனர்.
இது தொடர்பாக  பாஸ்ட் புட் உரிமையாளர் உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், அந்த புகாரில் தன்னிடம் பணத்தை பறித்து சென்றது உறையூர் 57-வது வார்டு தி.மு.க செயலாளர் தாமு சேகர் திருவானைக்காவலை சேர்ந்த ரவுடி பரணீதரன் அவரது மனைவி வித்யா ஸ்ரீரங்கத்தை சேர்ந்த நித்தியானந்தம் சங்கரநாராயணன் மற்றும் பார்த்தசாரதி என குறிப்பிட்டிருந்தார்.
உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில்  நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறை தி.மு.க வார்டு செயலாளர் தாமுசேகர், ரவுடி பரணீதரன் அவரது மனைவி வித்யா சங்கரநாராயணன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். தி.மு.க பிரமுகரின் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பார்த்தசாரதி நித்தியானந்தம் ஆகியோரை போலீசார் தீவீரமாக தேடி வருகின்றனர். ஓட்டல் உரிமையாளரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த தி.மு.க பிரமுகர் உட்பட நான்கு பேர் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story