Top
undefined
Begin typing your search above and press return to search.

காஷ்மீரில் 2018-ஆம் ஆண்டு மட்டும் 232 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: இந்திய ராணுவம் தகவல்

காஷ்மீரில் 2018-ஆம் ஆண்டு மட்டும் 232 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: இந்திய ராணுவம் தகவல்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  10 Dec 2018 1:47 AM GMT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 2018ஆம் ஆண்டில் இதுவரை 232 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
2018-ஆம் ஆண்டில் இதுவரையிலும் 232 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தன. அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி வரையிலும் 51 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 216 பேர் காயமடைந்தனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 85 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 170 பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்துள்ளனர். இதில் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது கற்களை வீசி நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களும் அடங்கும்.
இதுதவிர்த்து, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் 240 பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களில் வெளிநாட்டு பயங்கரவாதிகளும் அடங்குவர். காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் மேற்கண்ட காலக்கட்ட பகுதியில் கற்வீச்சு தாக்குதல் சம்பவங்கள் குறிப்பிட்ட அளவுக்கு குறைந்துள்ளன. ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஜூன் மாதம் 19-ஆம் தேதி முதல் ஆளுநர் ஆட்சி அமலில் இருந்தது. இக்காலக்கட்டத்தில் காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது என்று பாதுகாப்புப் படை அதிகாரிகள் வட்டாரங்கள் கூறின.
Next Story