Top
undefined
Begin typing your search above and press return to search.

சார்க் நாடுகளுக்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு அளிக்கும் - பிரதமர் மோடி

சார்க் நாடுகளுக்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு அளிக்கும் - பிரதமர் மோடி

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  10 Dec 2018 1:51 AM GMT

தெற்காசிய மண்டலத்தில் அமைதியும் பாதுகாப்பும் நீடிக்க இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் மோடி சார்க் நாடுகளின் தலைவர்களிடம் உறுதியளித்துள்ளார்.
19-வது சார்க் மாநாட்டை பாகிஸ்தான் அரசு இஸ்லாமாபாதில் நடத்துகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் விடுத்த அழைப்பை அண்மையில் பிரதமர் மோடி நிராகரித்தார். பாகிஸ்தானில் நடத்தப்படும் சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்கான சூழ்நிலை இல்லை என்று இந்தியா விளக்கம் அளித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் தெற்காசிய மண்டலத்தில் அமைதி நீடித்திருக்க இந்தியா பூரண ஒத்துழைப்பு அளிக்கும் என்று நேற்று சார்க் நாடுகளின் தலைவர்களிடம் பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சார்க் விதிகளின் படி ஒரு உறுப்பு நாடு பங்கேற்காவிட்டால் கூட அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட அல்லது ஒத்திவைக்கப்பட வேண்டும். இந்தியா பங்கேற்க மறுத்துவிட்டதால், இந்தியாவைத் தொடர்ந்து மாலத்தீவு ,நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளும் மாநாட்டில் பங்கேற்க முடியாது என மறுப்புத் தெரிவித்துள்ளன. இதனால் பாகிஸ்தானில் மாநாடு நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தமது சார்க் தின செய்தியில் கூறுகையில் "உறுப்பு நாடுகளிடையே தீர்வு காண முடியாதபடி பிரச்சினைகள் வளர்ந்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளார். இதனால் சார்க் உச்சி மாநாடு தனது பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவை கண்டுள்ளது என்றும் சமூக-பொருளாதார இலக்கை எட்ட முடியாமல் தடை ஏற்பட்டுள்ளது" என்றும் கூறியுள்ளார்.
Next Story