Top
undefined
Begin typing your search above and press return to search.

மத்திய அரசு அறிமுகப்படுத்திய பெண்கள் பாதுகாப்பு மற்றும் பொது உதவிக்கான "181" எண் சேவை: தமிழகத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

மத்திய அரசு அறிமுகப்படுத்திய பெண்கள் பாதுகாப்பு மற்றும் பொது உதவிக்கான 181 எண் சேவை: தமிழகத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  10 Dec 2018 8:06 PM GMT

காவல்துறை(100),  ஆம்புலன்ஸ்(108),தீயணைப்புத் துறை(101) என்று ஒவ்வொரு அவசர உதவிக்கும் ஒரு எண்ணை பயன்படுத்துவதற்கு பதிலாகநாடு முழுவதும் ஒரே அவசர எண்ணை (112), அனைத்து அவசர உதவிக்கும் அழைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. கடந்த சனிக்கிழமை (டிச.1) உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். இந்த வசதி மூலமாக அருகில் இருக்கும் காவல் நிலையம் மற்றும் தன்னார்வலர்களிடம் பெண்கள் உதவி கோர முடியும். இந்த திட்டத்தை முதல் முதலாக ஹிமாசலப் பிரதேசம் அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம்  அறிமுகப்படுத்திய திட்டத்தின் வழிகாட்டுதலுடன் பெண்கள் பாதுகாப்புக்கான 181 என்ற இலவச தொலைபேசி எண் சேவையை காணொளி மூலம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இதன் மூலம் குடும்ப வன்முறைவரதட்சணை கொடுமைபாலியல் ரீதியாக பாதிக்கப்படுவதுஉடல்-மனநல பாதிப்புகள்பெண்களுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள்பள்ளிகள்கல்லூரிகளில் வழங்கப்படும் ஸ்காலர்ஷிப்புகள் உள்பட பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள்பெண்களுக்கு தேவையான உதவி மற்றும் பாதுகாப்புக்கு 181 இலவச தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.
Next Story