Top
undefined
Begin typing your search above and press return to search.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது குறித்து ஒரு வாரத்தில் தீர்ப்பு: தேசிய பசுமைத் தீர்ப்பாய தலைவர் அறிவிப்பு

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது குறித்து ஒரு வாரத்தில் தீர்ப்பு: தேசிய பசுமைத் தீர்ப்பாய தலைவர் அறிவிப்பு

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  10 Dec 2018 8:24 PM GMT

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது குறித்த வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்பாயத் தலைவர் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது கிளர்ச்சியாளர்கள் சிலர் வன்முறையில் இறங்கினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்த வன்முறையாளர்களை கட்டுப்படுத்த போலீசார் தடியடி சம்பவம் நடத்தினர். அப்போது வன்முறையாளர்கள் போலீசாரை சூழ்ந்துகொண்டு கல்லால் தாக்கினார்கள். பலர் அங்கிருந்த அரசு வாகனங்களையும் தீவைத்து கொளுத்தத் தொடங்கினர். அப்போது நடந்த காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 
13 பேர் பலியானர்கள். அதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக் கோரியும்தமிழக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரியும் வேதாந்தா குழுமம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை,தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடந்து வந்தது.

மீண்டும் ஆலையை திறக்கக் கோரி ஆலை தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் அறவழிப் போராட்டங்கள் நடத்தினர். 
இந்த நிலையில் ஆலை மூடப்பட்டது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்டார். அவர் தாக்கல் செய்த அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்து பிறப்பித்த உத்தரவு இயற்கை நீதிக் கொள்கைகளுக்கு எதிராக உள்ளது. வேதாந்தா குழுமத்துக்கு நோட்டீஸ் அளிக்கப்படவில்லை. மேலும்
அவர்களது கருத்தைக் கேட்க வாய்ப்பும் அளிக்கப்படவில்லை.
ஆலையை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ள காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. வேதாந்தா குழுமம் விதிமுறைகளை மீறியிருப்பது கண்டறியப்பட்டிருந்தாலும்,ஆலையை மூடுவதற்காக தெரிவிக்கப்பட்டுள்ள காரணங்கள் நியாயப்படுத்தும் வகையில் இல்லை. ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க பசுமைத் தீர்ப்பாயம் கருதுவதாக இருந்தால் விதிமுறைகளுடன் அனுமதி அளிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்பாயத் தலைவர் ஏ.கே. கோயல் அறிவித்துள்ளார்.  
Next Story