Top
undefined
Begin typing your search above and press return to search.

நாடு முழுவதிலும் செங்கல் பயன்பாட்டிற்கு தடையா ? மத்திய அரசு என்ன சொல்கிறது.?

நாடு முழுவதிலும் செங்கல் பயன்பாட்டிற்கு தடையா ? மத்திய அரசு என்ன சொல்கிறது.?

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  11 Dec 2018 1:38 AM GMT

சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களுக்கு ஊக்கம் அளிக்கும் நோக்கில், மத்திய அரசு, தன் கட்டுமான பணிகளில், செங்கற்களை பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர், டில்லியில் நேற்று கூறுகையில், "மத்திய அரசு, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களுக்கு ஊக்கம் அளிக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, களிமண் சுட்டு உருவாக்கப்படும் செங்கற்களை, மத்திய அரசின் திட்டப் பணிகளில் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும்படி, CPWD எனப்படும் மத்திய பொதுப்பணித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


செங்கற்களை தயாரிக்க, நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. இதனால், செங்கல் சூளைகள் உள்ள பகுதிகளில், காற்று மாசு அதிகரிக்கிறது. எனவே, இந்த மாசு அளவை குறைக்கும்படி, டில்லி நிர்வாகத்துக்கு, அக்டோபரில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.



Source: BBC
Next Story