Top
undefined
Begin typing your search above and press return to search.

தவறை ஒப்புக்கொள்ள முடியாமல் தவிக்கும் காங்கிரஸ் குடும்பத்தின் சூட்சமம்

தவறை ஒப்புக்கொள்ள முடியாமல் தவிக்கும் காங்கிரஸ் குடும்பத்தின் சூட்சமம்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  10 Dec 2018 7:42 PM GMT

சில தினங்களுக்கு முன்னர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், சோனியாவின் மருமகனுமான வதேரா மற்றும் அவரது கூட்டாளிகள் அலுவலகங்களில் நிதி மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


ராபர்ட் வதேரா ஸ்கை லைட் ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது ராபர்ட் வதேரா தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பிகனீர் பகுதியில் நிறைய அரசு நிலத்தை வாங்கினார். ஏழை கிராம மக்களின் மறுவாழ்வுக்காக உதவுவதாக கூறி அந்த நிலங்களை அவர் வாங்கி இருந்தார். ஆனால் பின்னர் அந்த அரசு நிலங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டன. இதில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


ராஜஸ்தான் போலீசார் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரித்தனர். குற்றப் பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கிடையே கடந்த 2015-ம் ஆண்டு அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனாலும் அவர் ஆஜராகாவில்லை. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள ராபர்ட் வதேராவின் அலுவலகம் மற்றும் பெங்களூரில் ராபர்ட் வதேராவுக்கு நெருக்கமானவர்களின் அலுவலகங்களுக்கும் சென்ற அமலாக்க துறை அதிகாரிகள்  சோதனை நடத்தினர். இந்த சோதனை தொடர்பாக எவ்வித முன் அறிவிப்பும் வழங்கவில்லை என வாத்ராவின் வக்கீல் குறை கூறியுள்ளார். ஏற்கனவே, நேஷனல் ஹெரால்டு வழக்கில் வருமான வரி தொடர்பான வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை மீண்டும் விசாரிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், வதேரா அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் கட்சி, தோல்வி பயத்தால்தான் மோடி அரசு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியது. மேலும் பொய் தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனைகளில் ஈடுபட வேண்டாம் எனவும், பதில் கூற வேண்டிய தீர்ப்பு நாள் விரைவில் வரும் எனவும் விசாரணை அதிகாரிகளுக்கு காங்கிரஸ் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். காங்கிரசாரின் இந்த நடவடிக்கைக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக கட்சித்தலைவர் ஷாநவாஸ் உசேன் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஊழலுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். ஆனால் இது தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளை காங்கிரஸ் தலைவர்கள் மிரட்டுகின்றனர். நாட்டில் ஊழலுக்கு ஒருபோதும் இடம் இல்லை’ என்று கூறினார். பிரதமர் மோடியையும், நாட்டு மக்களையும் காங்கிரஸ் கட்சி அவமதிப்பதாக கூறிய ஷாநவாஸ் உசேன், காங்கிரசார் தங்கள் தோல்விகளை மறைக்க முடியாது எனவும் தெரிவித்தார்.


Picture Courtesy : India Today

Next Story