Top
undefined
Begin typing your search above and press return to search.

மும்பை தாக்குதலை நடத்தியது ‘லஷ்கர் இ-தொய்பா’ இயக்கம் தான் - முதல் முறையாக வெளிப்படையான பதில்

மும்பை தாக்குதலை நடத்தியது ‘லஷ்கர் இ-தொய்பா’ இயக்கம் தான் - முதல் முறையாக வெளிப்படையான பதில்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  10 Dec 2018 7:57 PM GMT

பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் கடல் வழியாக மும்பைக்குள் கடந்த 2008-ம் ஆண்டு,  நவம்பரில்  ஊடுருவினர். இவர்கள் மும்பையின் பிரபல தாஜ் ஓட்டல் உட்பட பல்வேறு இடங்களில் தாக்குதலை நிகழ்த்தி,  இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் 166 பேரை கொன்று குவித்தனர். இந்த தாக்குதல் சம்பவம்,  உலகை அதிரச் செய்தது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அளவு பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தினை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவில் இன்னும் சிக்கல் எழுந்தது.
இத்தீவிரவாதிகளில் 9 பேர்,  பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி மட்டும் பிடிபட்டான். விசாரணையின் முடிவில் பின்னர்  தூக்கிலிடப்பட்டான். தீவிரவாதிகளுக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் முதலில் மறுத்தது. பின்னர் அஜ்மல் கசாப் மற்றும் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்தான் என ஒப்புக்கொண்டது.
இத்தாக்குதலில் தொடர்புடையவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் மறுத்து விட்டது. தங்கள் நாட்டிலேயே விசாரணை நடத்தி தண்டிப்பதாக கூறி வந்ததோடு,  போதிய ஆதாரங்கள் இல்லை என்று இந்த வழக்கை முடக்கும் வகையில் செயல்பட்டது. இதனிடையே இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் முக்கிய தீவிரவாதி முகமது கனி உஸ்மானை, கடந்த 2016 இல் ஆஸ்திரியாவில் போலீசார் கைது செய்தனர். கடந்த 2017 இல் மும்பையில் தீவிரவாத தாக்குதலை அரங்கேற்றியது பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட அமைப்பு தான் என அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர்முகமது அலி துரானி தெரிவித்துள்ளார். அதேசமயம், பாகிஸ்தான் அரசுக்கு இதில் தொடர்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மும்பையில் தாக்குதல் நடத்தப்பட்ட 10வது ஆண்டு தினம் கடந்த நவம்பர் 26 இல் அனுசரிக்கப்படுகிறது.  ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, “மும்பை தாக்குதலையும், அதனை நடத்தியவர்களையும் இந்தியா ஒருபோதும் மறக்காது. நாங்கள் அதற்கான வாய்ப்புக்கு காத்திருக்கிறோம். சட்டம் அதனுடைய கடமையை செய்யும் என்பதை தேச மக்களுக்கு உறுதியளிக்கிறேன்,” என்றார். பாதிக்கப்பட்டவர்களுடன் இருப்பதாக கூறிய அவர் நீதி கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த தாக்குதலை உலக நாடுகள் வன்மையாக கண்டித்தன. தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தியது. இதையடுத்து கண்துடைப்பு நாடகம் போல் பாகிஸ்தான் விசாரணை கமிஷன் ஒன்றை அமைத்தது. ஆனால் லஷ்கர் இ-தொய்பா இயக்கத்தின் தலைவனும், மும்பைத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவனுமான ஹபீஸ் சயீத் உள்ளிட்ட யார் மீதும் பாகிஸ்தான் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அளித்த பேட்டியில் மும்பை தாக்குதலை நடத்தியது லஷ்கர் இ-தொய்பாதான் என்பதை ஒப்புக்கொண்டு உள்ளார். மும்பை தாக்குதல் குறித்து பாகிஸ்தான் வெளிப்படையாக இது போல் ஒப்புக்கொண்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
இது பற்றி இம்ரான்கான் கூறுகையில், “மும்பை தாக்குதல் நடத்தியது லஷ்கர் இ-தொய்பா அமைப்புதான். இந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் சரியான தீர்வு காணப்படும். வழக்கு குறித்த முழு விவரங்களையும் என்னிடம் அளிக்குமாறு கேட்டு இருக்கிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார். அதே போல் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் பின்லேடனை கொல்வதற்கு பாகிஸ்தானுக்கு தெரியாமல் அமெரிக்க படைகள் புகுந்து நடத்திய தாக்குதலையும் தனது பேட்டியில் அவர் கண்டித்தார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்பட்ட போது, வெடிகுண்டு தாக்குதலில் ஏராளமான பாகிஸ்தானிய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஆனாலும் எங்கள் மீது நம்பிக்கை வைக்காமல் 2011-ல் பாகிஸ்தானுக்குள் புகுந்து அமெரிக்க ராணுவம் பின்லேடனை கொன்று விட்டது. இது எங்களுக்கு அவமானம் ஆகும். நான் அமெரிக்காவுக்கு எதிரானவன் என்பதும் தவறு” என்று குறிப்பிட்டார்.
Next Story