Top
undefined
Begin typing your search above and press return to search.

மத்திய பிரதேசத்தில் மணல் கொள்ளையர்களை பிடித்த தமிழ் ஐ.ஏ.எஸ் - குவியும் பாராட்டு!

மத்திய பிரதேசத்தில் மணல் கொள்ளையர்களை பிடித்த தமிழ் ஐ.ஏ.எஸ் - குவியும் பாராட்டு!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  11 Dec 2018 1:45 AM GMT

உத்திர பிரதேசத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் கொண்ட ஒரே மாவட்டமாகக் கருதப்படுவது சோன்பத்ரா. ஜார்கண்ட், பிஹார் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லையில் இது அமைந்துள்ளது. இங்கு மத்திய பிரதேசத்தில் தொடங்கி சோத்பத்ரா எனும் நதி ஓடுகிறது. சோன்பத்ரா நதியில் தொடர்ந்து மணல் திருடப்பட்டு வந்துள்ளது. இதன் மீது அம்மாவட்ட முன்னாள் பா.ஜ.க செயலாளர் கமலேஷ் திவாரி, தன் கட்சி ஆளும் உத்திர பிரதேச அரசு மீது புகார் தெரிவித்து வந்தார்.


இந்நிலையில், நேற்று இரவு சோன்பத்ரா நதி ஓடு கோராவல் தாலுக்கா பகுதியில் உதவி ஆட்சியரான மணிகண்டன் ஐ.ஏ.எஸ் திடீர் சோதனை மேற்கொண்டார். அதில், செனியா கிராமத்தில் நதிக்கரையில் மணலை அள்ளி 11 லாரிகளில் நிரப்பிக் கொண்டிருந்த வாகனங்கள் சிக்கின. உ.பி.யின் செனியாவில் இருந்து மணலை அள்ளி, அதே கரையின் மத்திய பிரதேசத்தின் டட்ரா கிராமத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய வாகனங்களில் மணலை நிரப்பியதும் சிக்கின. இந்த சம்பவத்தில் ஐந்து வழக்குகள் பதிவு செய்து விசாரணை தொடர்கிறது.

இருவரின் உரிமங்களும் தவறாகப் பயன்படுத்தியதாக ரத்து செய்யப்பட்டுள்ளன. நதியின் கரைகளைச் சுரண்டி மணல் அள்ளி வந்தவர்களைப் பிடித்தமைக்காக உ.பி.யில் மணிகண்டனுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இது குறித்து பேசிய ஆட்சியர் மணிகண்டன் "நாள் ஒன்றுக்கு இங்கு சுமார் நூறு லாரிகளில் மணலை அள்ளியுள்ளனர். மத்திய பிரதேசத்தின் முக்கிய மணல் மாஃபியா சிக்கியுள்ள இந்த வழக்கை இருமாநில அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்த முயற்சிக்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.



Source : Kamadenu, Hindu, BBC
Next Story