Top
undefined
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க-வுக்கு 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி, தொடர்ந்து 4வது முறையாக ஆட்சி அமைக்கும் : சிவராஜ் சிங் சவுஹான்

பா.ஜ.க-வுக்கு 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி, தொடர்ந்து 4வது முறையாக ஆட்சி அமைக்கும் : சிவராஜ் சிங் சவுஹான்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  10 Dec 2018 7:48 PM GMT

மத்திய பிரசேதத்தில் பா.ஜனதா மிக சுலபமாக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து 3 முறையாக பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. 15 ஆண்டுகள் பா.ஜனதா ஆட்சியில் உள்ளது. முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் இருந்து வருகிறார். தொடர்ந்து 4-வது முறையாக பா.ஜனதா ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதற்கிடையே மத்தியப் பிரதேசத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 230 தொகுதிகளில் பா.ஜனதா 126 தொகுதிகளிலும், காங்கிரஸ் 89 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 6 தொகுதிகளிலும், மற்றவை 9 தொகுதிகளிலும் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நிறுவனங்கள் வேறு மாதிரியாக கருத்துக்கணிப்புகளை கூறிவருகிறது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், மாநிலத்தில் பா.ஜனதா வெற்றி பெறுமா அல்லது காங்கிரஸ் வெற்றி பெறுமா என்ற கருத்துக்கணிப்புகள் இடையே வேறுபாடுகள் நிலவுகிற நிலையில், உறுதியாக எந்த நிறுவனமும் கணிப்பை தெளிவாக சொல்லவில்லை. இந்நிலையில் தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியான பின்னர் முதல்வர்  சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்கள் சந்திப்பில், “சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் பா.ஜனதாவுக்கு ஆதரவாக உள்ளனர். நீண்ட நாட்களாக பொதுமக்களுடன் தொடர்பில் உள்ளேன். அனைத்து தரப்பு மக்களின் ஆசி எங்களுக்கு உள்ளது. அதனால் தேர்தலில் வெற்றி பெறுவது கடினமாக இருக்காது. எளிதில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றுவிடுவோம்” என்று தெரிவித்தார்.
Next Story