Top
undefined
Begin typing your search above and press return to search.

மின்னணு முறையில் விவசாயிகளுக்கு விவசாயக் கடன்

மின்னணு முறையில் விவசாயிகளுக்கு விவசாயக் கடன்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  12 Dec 2018 6:24 PM GMT

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயத்தில் தான் இருக்கிறது என்பர். பல்வேறு வகையான தொழில்களுக்கு தேவைப்படுவது போலவே வேளாண்மை தொழிலுக்கும் மூலதனம் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. விவாசயிகள் தங்கள் கடன் தேவைகளை பல வழிகளில் பூர்த்தி செய்து வருகின்றனர். முதன் முதலாக விவசாயிகளுக்கு வங்கி கடன் என்பது கிராம தொடக்க கூட்டுறவு வங்கிகள் மூலம் தான் சாகுபடி செலவுகளுக்கு பணமும், இடு பொருள்கள் உரம் பூச்சி மருந்து முதலியவை வழங்கப்பட்டது. நீண்ட கால கடன் கூட்டுறவு நிலவள வங்கிகள் மூலம் வழங்கப்பட்டது. விவசாயிகள் தனியாரிடமும், கமிஷன் மண்டி, கந்து வட்டிக்காரர்களிடமும், உரக்கடைக்காரர்களிடமும் கடன் பெற்று சாகுபடி செய்வதுண்டு.
ஆனால் வங்கிகள் அரசுடமை ஆக்கப்பட்ட பின்பு கிராமங்கள் பலவற்றில் வங்கி கிளைகள் திறக்கப்பட்டன. அங்கு கிராம மேம்பாட்டிற்கும், குறிப்பாக வேளாண்மைக்கும் கடன்கள் வழங்கப்படுகின்றன. வங்கிகளில் தனியார் வங்கிகள், கிராம தொடக்க கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு நிலவள வங்கிகள், கிராமிய வளர்ச்சி வங்கிகள், பொதுத்துறை வங்கிகள், வெளிநாட்டு வர்த்தக வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் என்று பல வகைகள் உள்ளன. மத்திய அரசின் ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி வங்கிகள் கொடுக்கும் மொத்த கடன் அளவில் கட்டாயமாக 18 சதவீதம் வேளாண்மை அபிவிருத்திக்கும், 40 சதவீதம் முன்னுரிமை கடனாகவும் வழங்கப்பட வேண்டும். இந்த இலக்கை ஒவ்வொரு ஆண்டும் ரிசர்வ் வங்கி ஆய்வு செய்து கண்காணித்து வருகிறது.
வங்கி கடன்களால் உள்ள நன்மை என்னவென்றால், குறைந்த வட்டி, எளிய தவணை, உடனடி சேவை என்பது தான். கடன்களில் பலவகைகள் உண்டு. இதில் குறுகிய கால கடனில் பயிர் சாகுபடி கடன்கள், உழவர் கடன் அட்டை திட்டம், விவசாய நகைக்கடன்கள், மகசூல் விற்பனைக்கடன் என்று பிரிவுகள் இருக்கின்றன. அந்த வகையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனை இன்னும் எளிமைபடுத்தும் பொருட்டு,  நவீன மின்னணு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயக் கடன் வழங்க பாரத ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய அந்த வங்கியின் வர்த்தகம் மற்றும் மின்னணு வங்கிப் பிரிவு நிர்வாக இயக்குநர் பி.கே. குப்தா, தற்போது ஏராளமான தொழில்நுட்ப நிதி நிறுவனங்கள் மின்னணு முறையில் கடன் வழங்கி வருவதாகத் தெரிவித்தார். மேலும் மாநில அரசுகளும் விவசாயிகளின் நில விவரங்களை சேகரித்து வைத்துள்ளதாக கூறிய குப்தா, இதனைப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு அதிநவீன மின்னணு முறையில் கடன் வழங்க பாரத ஸ்டேட் வங்கி முயன்று வருவதாகக் குறிப்பிட்டார். இதற்காக பிற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து சோதனை முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



Source: Vikaspediya, BBC

Next Story