Top
undefined
Begin typing your search above and press return to search.

இது பிரதமர் மோடி அரசுக்கு எதிரான தீர்ப்பு அல்ல - ராஜ்நாத் சிங் விளக்கம்

இது பிரதமர் மோடி அரசுக்கு எதிரான தீர்ப்பு அல்ல - ராஜ்நாத் சிங் விளக்கம்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  12 Dec 2018 6:04 PM GMT

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் 2 கட்டங்களாக நவம்பர் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளிலும், மத்திய பிரதேசம், மிசோரமில் நவம்பர் 28-ம்தேதியும் தேர்தல் நடத்தப்பட்டது. ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் டிசம்பர் 7-ம்தேதி வாக்குகள் பதிவானது. இந்த நிலையில் முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன.


இதன்படி மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக பெருவாரியான இடங்களை பெற்றது.. ஆனால் காங்கிரஸ் பெரும்பாண்மை பெற்ற நிலையில் இந்த மாநிலங்களில் எல்லாம் அக்கட்சி கட்சி ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. தெலங்கானாவில் மாநில கட்சியான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்), மிசோரம் மாநிலத்தில் மிசோரம் தேசிய முன்னணி (எம்.என்.எப்.) ஆகியவை வெற்றி பெற்றுள்ளன.


5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பா.ஜனதா மூத்த தலைவரும், உள்துறை மந்திரியுமான ராஜ்நாத் சிங்கிடம் நிருபர்கள் நேற்று பாராளுமன்ற வளாகத்தில் கருத்து கேட்டனர். ராஜ்நாத் சிங் அதற்கு பதில் அளிக்கையில், ‘‘இந்த தேர்தல்கள் மாநில அரசுகளின் செயல்பாடு அடிப்படையில் நடைபெற்றது. இது மோடி அரசுக்கு எதிரான தீர்ப்பு அல்ல. காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணியும் தெலுங்கானாவில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளதே. தேர்தலில் வெற்றிபெற்ற அனைத்து கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.


Source: NDTV

Next Story