Top
undefined
Begin typing your search above and press return to search.

வங்கி துறையை சீரமைப்பதே என் முதன்மை பணி: ரிசர்வ் வங்கி புதிய கவர்னர் சக்திகாந்த தாஸ்

வங்கி துறையை சீரமைப்பதே என் முதன்மை பணி: ரிசர்வ் வங்கி புதிய கவர்னர் சக்திகாந்த தாஸ்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  12 Dec 2018 1:07 PM GMT

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக பொறுப்பேற்றுள்ள சக்திகாந்த தாஸ் இன்று மும்பையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: "இந்திய பொருளாதார வளர்ச்சிக்காக தம்மால் முடிந்த அளவு சிறப்பாக செயல்படுவேன், வங்கி துறையை சீரமைக்க முதலில் கவனம் செலுத்துவேன். இது தொடர்பாக ஆலோசிக்க நாளை காலை பொதுத்துறை வங்கிகளின் மேலாண் இயக்குனர்கள் மற்றும் தலைமை செயலதிகாரிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளேன்.
இந்திய பொருளாதாரத்தில் வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. வங்கிகள் எதிர்கொண்டுள்ள சவால்களை சீரமைக்க வேண்டியது அவசியமானது" என்றார். அனைத்து விவகாரங்களுக்கும் ஆலோசனை நடத்தி தீர்வு காணப்படும் எனவும் சக்திகாந்ததாஸ் கூறினார்.
Next Story