Top
undefined
Begin typing your search above and press return to search.

மத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பா.ஜ.க

மத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பா.ஜ.க

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  13 Dec 2018 4:32 AM GMT

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் 2 கட்டங்களாக நவம்பர் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளிலும், மத்திய பிரதேசம், மிசோரமில் நவம்பர் 28-ம்தேதியும் தேர்தல் நடத்தப்பட்டது. ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் டிசம்பர் 7-ம்தேதி வாக்குகள் பதிவானது. இந்த நிலையில் முடிவுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன.



இதில் மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தோல்வி அடைந்தாலும், காங்கிரசை விட அதிகமான வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.  230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேச சட்டசபையில் ஒரு கட்சி பெரும்பான்மை பெறுவதற்கு 116 இடங்கள் தேவை. இங்கு காங்கிரஸ் 114 இடங்களிலும், பாஜக 109 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் 2 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.



இந்த மாநிலத்தில் பா.ஜ.க தோல்வியடைந்தபோதும் வாக்குகள் அடிப்படையில் காங்கிரசை முந்தி உள்ளது. காங்கிரஸ் கட்சி 1 கோடியே 55 லட்சத்து 95 ஆயிரத்து 153 வாக்குகள் (40.9 சதவீதம்) பெற்றுள்ளது. பா.ஜ.க 1 கோடியே 56 லட்சத்து 42 ஆயிரத்து 980 வாக்குகள் (41 சதவீதம்) பெற்றுள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 5.8 சதவீதம், அதாவது 22 லட்சத்து 18 ஆயிரத்து 230 வாக்குகள் பெற்றுள்ளனர்.

Next Story