Top
undefined
Begin typing your search above and press return to search.

முப்படைகளில் விமானப்படையில் பெண் அதிகாரிகள் அதிகம் :பாதுகாப்பு துறையில் அதிகரிக்கும் பெண்களின் எண்ணிக்கை

முப்படைகளில் விமானப்படையில் பெண் அதிகாரிகள் அதிகம் :பாதுகாப்பு துறையில் அதிகரிக்கும் பெண்களின் எண்ணிக்கை

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  12 Dec 2018 6:39 PM GMT






விமானப்படையில் 13.09 சதவீத பெண் அதிகாரிகள் பணிபுரிவதாகவும், முப்படைகளில் பெண்களின் எண்ணிக்கையில் இதுதான் அதிகம் என மத்திய அரசு கூறியுள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு துறை இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே லோக்சபாவில் எழுத்துபூர்வமாக அளித்த பதில்: பெண்களில் விமானப்படையில் 13.09 சதவீதம் பேரும், ராணுவத்தில் 3.80 சதவீதம் பேரும், கடற்படையில் 6 சதவீதம் பேரும் அதிகாரிகளாக பணிபுரிகின்றனர். முப்படையிலும், பெண்கள் அதிகாரிகள் மட்டத்தில் தான் தேர்வு செய்யப்படுகின்றனர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
மேலும், ரஷ்யாவில் பாதுகாப்பு தளவாடங்கள் வாங்குவதற்கு அமெரிக்க தடை குறித்து அமைச்சர் கூறுகையில், தடை காரணமாக பாதுகாப்பு தளவாட கொள்முதலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. மஹாராஷ்டிராவில் ராணுவ குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.





Next Story