Top
undefined
Begin typing your search above and press return to search.

மத்திய பிரதேசத்தில் காங்கிரசை விட வாக்குகளை அள்ளிய பா.ஜ.க-வுக்கு ஆட்சி மட்டும் கை நழுவியதேன்? மாநில அரசியல் நோக்கர்கள் கருத்து

மத்திய பிரதேசத்தில் காங்கிரசை விட வாக்குகளை அள்ளிய பா.ஜ.க-வுக்கு ஆட்சி மட்டும் கை நழுவியதேன்? மாநில அரசியல் நோக்கர்கள் கருத்து

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  13 Dec 2018 4:34 AM GMT

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் 2 கட்டங்களாக நவம்பர் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளிலும், மத்திய பிரதேசம், மிசோரமில் நவம்பர் 28-ம்தேதியும் தேர்தல் நடத்தப்பட்டது. ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் டிசம்பர் 7-ம் தேதி வாக்குகள் பதிவானது. இந்த நிலையில் முடிவுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன.


இதில் மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தோல்வி அடைந்தாலும், காங்கிரசை விட அதிகமான வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. 230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேச சட்டசபையில் ஒரு கட்சி பெரும்பான்மை பெறுவதற்கு 116 இடங்கள் தேவை. இங்கு காங்கிரஸ் 114 இடங்களிலும், பாஜக 109 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் 2 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.


ம.பி.,யில், 2003-ஆம் ஆண்டு முதல், 15 ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சி நடந்து வந்துள்ளது. துவக்கத்தில், உமா பாரதி, பாபுலால் கவுர் ஆகியோர் முதல்வராக இருந்துள்ளனர். 2005-ஆம் ஆண்டு முதல், சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக இருந்து வந்துள்ளார்.

இந்த மாநிலத்தில் பா.ஜ.க தோல்வியடைந்தபோதும் வாக்குகள் அடிப்படையில் காங்கிரசை முந்தி உள்ளது. காங்கிரஸ் கட்சி 1 கோடியே 55 லட்சத்து 95 ஆயிரத்து 153 வாக்குகள்(40.9 சதவீதம்) பெற்றுள்ளது. பா.ஜ.க 1 கோடியே 56 லட்சத்து 42 ஆயிரத்து 980 வாக்குகள்(41 சதவீதம்) பெற்றுள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 5.8 சதவீதம், அதாவது 22 லட்சத்து 18 ஆயிரத்து 230 வாக்குகள் பெற்றுள்ளனர்.


மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலில், ஒட்டு மொத்தமாக காங்கிரசை விட பா.ஜ.க, கூடுதல் ஓட்டுக்கள் பெற்று இருந்தாலும், ஆட்சியை பறி கொடுத்துள்ளது ஏன் என்பது குறித்து அம்மாநில அரசியல் கணிப்பாளர்கள் சில காரணங்களை தெரிவித்துள்ளனர்.
இங்கு, நோட்டாவுக்கு 5,42,295 ஓட்டுக்கள் விழுந்துள்ளன. இது, 1.4 சதவீதமாகும். ஆயிரம் ஓட்டுக்களுக்கு குறைவாக 10 தொகுதிகளில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்படி, காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் பா.ஜ.க 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.  பினா தொகுதியில், 632; ஜாவ்ரா தொகுதியில், 511; கோலாரஸ் தொகுதியில், 720 ஓட்டு வித்தியாசத்தில் காங்., வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பியோரா தொகுதியில், 826; தாமோக் தொகுதியில், 798; தெற்கு குவாலியர் தொகுதியில், 121; வடக்கு ஜபல்பூர் தொகுதியில், 578; ராஜ்நகர் தொகுதியில், 732; ராஜ்புர்( எஸ்.டி.,), 932; ஸ்வாஸ்ரா தொகுதியில், 350 ஓட்டு வித்தியாசத்தில் பா.ஜக., வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்கள் மற்றும் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
அதே சமயம் பெரும்பாலான தொகுதிகளில் பா.ஜ.க மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே ஆட்சியை பறிகொடுத்துள்ளதாகவும் இந்த தேர்தலை உள்ளூர் கண்ணோட்டத்திலேயே வாக்காளர்கள் பார்த்து முடிவுக்கு வந்ததாலும் பா.ஜ.க-வின் வெற்றி வாய்ப்பு தவறிவிட்டது. இந்த முடிவுகளைக் கொண்டு 2019 நாடாளுமன்ற தேர்தலை கணிக்க முடியாது, ஏனெனில் சென்ற 2003 சட்டமன்ற தேர்தலில் மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க உமா பாரதி தலைமையில் பெருவாரியான சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றியது. என்றாலும் 2004 நாடாளுமன்ற பொது தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறவில்லை என்றும் அங்குள்ள அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.
Next Story