Top
undefined
Begin typing your search above and press return to search.

விஜய் மல்லயாவை நாடு கடத்த, பிரதமர் மோடி அரும்பாடு படும் நிலையில் காங்கிரஸ் தலைவர்களை புகழ்ந்த விஜய் மல்லையா

விஜய் மல்லயாவை நாடு கடத்த, பிரதமர் மோடி அரும்பாடு படும் நிலையில் காங்கிரஸ் தலைவர்களை புகழ்ந்த விஜய் மல்லையா

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  13 Dec 2018 7:34 AM GMT

கடந்த காங்கிரஸ் ஆட்சி காலங்களில் தனக்கிருந்த அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ₹9,000 கோடி வரை பெற்று, அதை அடைக்காமல் வங்கிகளை ஏமாற்றி வந்தவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. கடந்த 2014-ஆம் ஆண்டு மோடி சர்க்கார் பதவி ஏற்றவுடன் வாராக் கடன்களை வசூலிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. வசூல் செய்வதில் வங்கிகளுக்கு அதிகாரம் அளிக்கும் தனி சட்டம் இயற்றப்பட்டது. இதனால் சிறை தண்டனைக்கு பயந்துபோன மல்லையா இங்கிலாந்து நாட்டுக்கு தப்பிச் சென்றார். அவரை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்த மோடி சர்க்கார் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும்படி கோரி இங்கிலாந்து அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
ஆனால் மல்லையா இங்கிலாந்து நீதிமன்றத்தில் ஆஜராகி முன் ஜாமீன் பெற்றுக் கொண்டார். அவரை இந்தியா கொண்டு வர மத்திய அரசு கடுமையான முயற்சிகளை மேற் கொண்டு வந்தது. ஆனால் பிரிட்டனில் உள்ள சட்ட விதிமுறைகளால், அவரைக் கொண்டு வருவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுவந்தது. மோடி சர்க்காரின் கெடுபிடி நடவடிக்கைகளை அடுத்து 100 சதவீதம் அசல் கடன் தொகையை கட்டிவிடுவதாகவும், தன்னை விட்டுவிடும்படியும் அவர் சென்ற வாரம் வங்கிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரும் வழக்கில் லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி அவரை இந்திய அரசின் வேண்டுகோளின்படி இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என சென்ற வாரம் இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டது. என்றாலும் பிரிட்டன் சட்டவிதிப்படி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவருக்கு 14 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டது. நிலை இப்படி இருக்க, தற்போது காங்கிரஸ் தலைவர்களை புகழ்ந்துள்ளார் விஜய் மல்லையா. நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தல்களின் வெற்றிக்கு, காங்கிரஸ் தலைவர்கள் சச்சின் பைலட் மற்றும் ஜ்யோதிர் ஆதித்யா சிண்டியா ஆகியோரை பாராட்டியுள்ளார்.
https://twitter.com/TheVijayMallya/status/1073015870329405441?s=19
இதனை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதை தான் விஜய் மல்லையா விரும்புகிறார் என்பது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.
Next Story