Top
undefined
Begin typing your search above and press return to search.

சாட்சிகளைப் பாதுகாக்கும் திட்டம் - சாதனை படைக்கும் மத்திய அரசு

சாட்சிகளைப் பாதுகாக்கும் திட்டம் - சாதனை படைக்கும் மத்திய அரசு

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  12 Dec 2018 6:31 PM GMT

நீதிக்குக் கண்களாகவும், காதுகளாகவும் விளங்குபவர்கள் சாட்சிகளே. குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதில் சாட்சிகளே முக்கியப் பங்கு வகிக்கின்றனர். அத்தகைய சாட்சிகளுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படுவதை சாட்சிகள் பாதுகாப்பு வரைவுத் திட்டம் உறுதி செய்யும். குற்றவியல் விசாரணையை மேலும் உறுதிப்படுத்த இந்த வரைவுத் திட்டம் உதவும். வழக்கின் தன்மையைப் பொருத்து, சாட்சிகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும். வழக்கு விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டவர் சாட்சி அளிப்பவரைப் பார்க்காதவாறு அவருக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும். அந்தப் பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்படுவது குறித்து சீரான காலஇடைவெளிகளில் மறுஆய்வு செய்யப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குற்றவியல் வழக்குகளில் சாட்சிகளைப் பாதுகாக்கும் திட்டம் ஒருவழியாக இறுதியாகியிருக்கிறது. இதற்கான சட்டம் நாடாளுமன்றத்தின் பரிசீலனையில் இருப்பதால், மத்திய அரசு உருவாக்கியுள்ள சட்டத்தின் அடிப்படையில் பணிகளைச் செய்யுமாறு மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். குற்றவியல் வழக்குகளில் சாட்சிகளை மிரட்டியும், வேறு வகையில் ஆசைகாட்டியும் குலைத்துவிடும் அபாயம் தொடர்கிறது.


வழக்குகளை விசாரித்து இறுதித் தீர்ப்பு வழங்கும் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும் நம் நாட்டில் சாட்சிகளைக் காப்பாற்ற இதுவரை அரசு சிந்திக்கவேயில்லை. பல்வேறு வழக்குகளின் போக்கையும் முடிவையும் ஆராய்ந்த மத்திய சட்ட ஆணையமும், பல நீதிமன்றங்களும், ‘சாட்சிகளுக்குப் பாதுகாப்பு இல்லாவிட்டால் வழக்கு நடத்த எடுக்கும் அனைத்து முயற்சிகளும் இறுதியில் வீணாகிவிடுகின்றன’ என்று பல முறை அரசுக்கு அறிவுறுத்தியுள்ளன. இதனை தொடர்ந்தே அரசு முனைப்புடன் செயல்பட்டு இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Next Story