Top
undefined
Begin typing your search above and press return to search.

ரபேல் விவகாரத்தில் தவறான தகவல்கள் அளித்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - கொந்தளிக்கும் பா.ஜ.க எம்.பி-க்கள்

ரபேல் விவகாரத்தில் தவறான தகவல்கள் அளித்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - கொந்தளிக்கும் பா.ஜ.க எம்.பி-க்கள்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  14 Dec 2018 8:50 AM GMT

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பா.ஜ.க ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இன்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இன்றும் பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சி எம்.பி-க்கள் திட்டமிட்டிருந்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. அப்போது, ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தும்படி காங்கிரஸ் எம்.பி-க்கள் முழக்கமிட்டனர்.
இந்த நிலையில் மத்திய அரசு ரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் செய்தற்கான சாட்சியங்கள் ஏதும் இல்லை என்றும், ஒப்பந்தம் சரியாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும், ரிலையன்ஸ் உட்பட எந்த நிறுவனத்துக்கும் வணிக ரீதியாக சலுகை எதுவும் காட்டப்படவில்லை என்றும் கூறி உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறி எதிர்கட்சிகளின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த பரபரப்பான தீர்ப்பு காலை 11 மணிக்கெல்லாம் வெளிவந்த நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.க எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர்.  பதிலுக்கு காங்கிரஸ் எம்.பி-க்களும் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அவை நடவடிக்கைகள் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
Next Story