Top
undefined
Begin typing your search above and press return to search.

பழனி கோவில் சிலை விவகாரத்தில் நேரடி விசாரணை தொடங்கும் - பொன். மாணிக்கவேல்‌

பழனி கோவில் சிலை விவகாரத்தில் நேரடி விசாரணை தொடங்கும் - பொன். மாணிக்கவேல்‌

SaiganeshBy : Saiganesh

  |  13 Dec 2018 7:14 PM GMT






திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நவபாஷாண சிலை சேதமடைந்ததாகக் கூறி தங்கத்தால் ஆன புதிய திருமேனி கடந்த 2004-இல் வடிவமைக்கப்பட்டது. இந்தச் சிலையை காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தைச் சேர்ந்த முத்தையா ஸ்தபதி வடிவமைத்தார். அந்தச் சிலையில் பழுது இருக்கவே சில மாதங்களிலேயே அது அகற்றப்பட்டது.
சிலையை வடிவமைத்ததில் 42 கிலோ தங்கம் முறைகேடு செய்யப்பட்டிருப்பதாக தொடரப்பட்ட வழக்கை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், இதுதொடர்பாக பழனியில் உள்ள ஆகம நிபுணர்கள், கோயில் அர்ச்சகர்கள், ஊழியர்கள், கடை வைத்திருப்போர், பக்தர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் விசாரணை செய்தனர்.
இதில், சிலை வடிவமைத்ததில் 42 கிலோ தங்கம் முறைகேடு செய்யப்பட்டிருப்பதும், கோயில் நிர்வாகத்துக்கு ₹1.31 கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த முறைகேட்டில் முத்தையா ஸ்தபதி, கடந்த 2004-ஆம் ஆண்டு பழனி கோயில் செயல் அலுவலராகப் பணிபுரிந்தவரும், அமைச்சர் ஒருவரின் உறவினருமான கே.கே.ராஜா உள்ளிட்ட சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், பழனி கோவில் சிலை முறைகேடு விவகாரத்தில் நேரடி விசாரணை தொடங்கும் என்று பொன். மாணிக்கவேல்‌ தெரிவித்துள்ளார். பழனி கோவில் சிலை முறைகேடு விவகாரத்தில் அடுத்த வாரம் முதல் நேரடி விசாரணை தொடங்கும். பழனி முருகன் கோயில் உற்சவர் சிலை முறைகேடு வழக்கை விசாரிக்க உள்ளேன். பழனியில் ஒருவாரம் தங்கி சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த உள்ளேன்' என்று கூறியுள்ளார்.







Next Story