Top
undefined
Begin typing your search above and press return to search.

காங்கிரசுக்கு ஓட்டு போடாத பகுதிகளில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய மாட்டேன் : ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஊடகங்களுக்கு திமிர் பேட்டி

காங்கிரசுக்கு ஓட்டு போடாத பகுதிகளில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய மாட்டேன் : ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஊடகங்களுக்கு திமிர் பேட்டி

SaiganeshBy : Saiganesh

  |  13 Dec 2018 7:02 PM GMT

ராஜஸ்தான் மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 99 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க. 73 இடங்களை மட்டுமே பெற்று ஆட்சியை காங்கிரசிடம் இழந்தது. இந்த நிலையில் பித்ஹூரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் ராஜேந்தர் சிங். இவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்டவர் சுரேஷ் தாகம். வாக்குகள் எண்ணப்பட்டபோது சுரேஷ் தாகம் காலையிலிருந்து பல சுற்று வாக்குகள் எண்ணிக்கையில் முன்னணியில் இருந்தார். அப்போது ராஜேந்தர் சிங் அதிக டென்ஷன் ஆகி போனார். பிறகு நடந்த சுற்றுக்களில் ராஜேந்தர் சிங் மிகவும் கஷ்டப்பட்டு சுரேஷ் தாகத்தைவிட 1661 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். என்றால் கூட அவரது ஆத்திரம் அடங்கவில்லை.


தான் எங்கே தோற்றுவிடுவோமோ என பயந்த அவர் தனக்கு வாக்களிக்காத பகுதி மக்கள் மீது அதிக கோபம் கொண்டார். இந்த நிலையில் நேற்று அவர் ஊடகங்களுக்கு முன்பாக தனது வெற்றி குறித்து பேட்டி அளிக்கையில் “எனக்கு வாக்களித்த பகுதி மக்கள் யார் என்று நன்றாக தெரியும். சில பகுதி மக்கள் எனக்கு வாக்களிக்கவில்லை. அவர்களுக்கு நான் எந்த நல்லதையும் செய்ய மாட்டேன். அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர்கள் பகுதிகளில் எந்த முன்னேற்றமும் இருக்காது, என ஆவேசமாக பேசியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பேசிய அந்த திகில் பேச்சு அங்கிருந்த மற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக செய்திகள் வந்துள்ளன. "இன்னும் நாற்காலியில் கூட உட்காரவில்லை. அதற்குள் ஆணவமா ? இன்னும் அடுத்த 5 ஆண்டுகளில் இவர் என்னென்ன செய்வாரோ", என பலர் முணுமுணுத்ததாக கூறப்படுகிறது.


Based on Inputs from OpIndia.
Next Story