Top
undefined
Begin typing your search above and press return to search.

ரபேல் கொள்முதல் வழிமுறைகளுக்கு உச்ச நீதிமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது - அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உட்பட மூத்த அமைச்சர்கள் கருத்து

ரபேல் கொள்முதல் வழிமுறைகளுக்கு உச்ச நீதிமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது - அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உட்பட மூத்த அமைச்சர்கள் கருத்து

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  14 Dec 2018 1:54 PM GMT

ரபேல் ஒப்பந்தத்தில் மத்திய அரசு அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி இறுதி செய்ததை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது என மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவரும், நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் நிருபர்களை சந்தித்தனர். அப்போது, மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: "ரபேல் விவகாரத்தில் தலையிட முகாந்திரம் இல்லை என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. ரபேல் ஒப்பந்தத்தை மத்திய அரசு அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி இறுதி செய்ததை சுப்ரீம் கோர்ட் அங்கிகரித்து உள்ளது. இந்த விவகாரத்தில் கோர்ட் நன்கு ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியுள்ளது. ரபேல் குறித்து மத்திய அரசின் முடிவை கோர்ட் ஏற்று கொண்டுள்ளது. விலை நிர்ணயத்தை கேள்விக்குள்ளாகவில்லை. விமானங்களின் விலை குறித்த தகவலை சீல் வைத்த கவரில் கோர்ட்டில் அளித்தோம். விலை சரியாக உள்ளதாக நீதிபதிகள் கூறினர். ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்பதையும் நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். வழக்கு விசாரணைக்கு ஏற்றது இல்லை என நீதபதிகள் தெளிவாக தெரிவித்தனர். வர்த்தக ரீதியாக, மத்திய அரசு யாருக்கும் சாதமாக நடக்கவில்லை. டசால்ட் இந்தியாவில் தொழில் கூட்டாளியை தேர்வு செய்வதில் தலையிடவில்லை. 36 போர் விமானங்கள் வாங்குவது குறித்து விமானப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர்கள், அனில் அம்பானி, அட்டர்னி ஜெனரல் கருத்து:
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி:
கோர்ட் தீர்ப்பு மூலம் அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யாகியுள்ளது. ரபேல் விமானங்களின் அவசியத்தை தீர்ப்பு உறுதிபடுத்தியுள்ளது. உண்மை என்றாவது வெளிவந்தே தீரும் என்பதற்கு ரபேல் ஆதாரம். பொய்க்கு ஆயுட்காலம் குறைவு. குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்கள் அனைத்து வகையிலும் தோல்வியடைந்துள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஒப்பந்தம் ஏன் இறுதி செய்யப்படவில்லை. தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டது ஏன்? காங்கிரஸ் ஆட்சியில் விமானப்படையின் தேவையை புறக்கணித்தது ஏன்? அனைத்து குற்றச்சாட்டுகளும் கற்பனையானது. இதன் மூலம் தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்ய முயன்றனர். ரபேல் ஒப்பந்தம் பாதுகாப்பு மற்றும் வணீகரீதியில் இந்திய நலன்களைபாதுகாக்கும். இறுதி செய்யப்பட்ட விலையானது, பேச்சுவார்த்தையின் போது கூறப்பட்ட விலையை விட குறைவு. ரபேல் குறித்து பார்லிமென்டில் விவாதிக்க தயாராக உள்ளோம். ஆனால், எதிர்க்கட்சிகள் தயங்கி செல்வது ஏன். ஒப்பந்தத்தை மறு ஆய்வு குறித்து கோர்ட் உத்தரவு மூலமே செய்ய முடியும். உண்மைக்கு ஒரு முகம் மட்டுமே இருக்கும். ஆனால், பொய்க்கு பல வடிவங்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்: ஆரம்பம் முதலே இது தெளிவாக தெரிந்தது தான். அரசியல் ஆதாயத்திற்காகவே காங்கிரஸ் இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்தது. இதில் அடிப்படை ஆதாரம் ஏதும் இல்லை. காங்கிரஸ் தலைவர் மக்களை தவறாக வழி நடத்துகிறார். இதனால் இந்தியர்களின் மதிப்பு உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் பார்லியிலும் நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
மஹாராஷ்டிரா முதல்வர் பட்நாவிஸ்: ரபேல் ஒப்பந்தம் குறித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, காங்கிரஸ் மற்றும் ராகுலின் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளது. எங்களது நிலையை தீர்ப்பு வெளிப்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில், இந்தியாவிற்கு அவப்பெயர் ஏற்படுத்த முயன்ற ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்.
அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் கூறியதாவது:
 சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சிறப்பானது. இதனால் மகிழ்ச்சியாக உள்ளேன். தீர்ப்பு மூலம், ஒப்பந்தத்தில் அரசிற்கு நற்பெயர் வழங்கப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
அனில் அம்பானி: சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையும், ரபேல் ஒப்பந்தம் தொடர்பான மனுக்களை தள்ளுபடி செய்ததையும் வரவேற்கிறேன். அடிப்படை ஆதாரமின்றி அரசியல் உள்நோக்கத்திற்காக என் மீது தனிப்பட்ட முறையிலும், ரிலையன்ஸ் குழுமத்திற்கு எதிராகவும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் பரப்பப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறியதாக தினமலர் செய்தி நாளேட்டில் கூறப்பட்டுள்ளது.
Next Story