Top
undefined
Begin typing your search above and press return to search.

வாஜ்பாய் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயம்

வாஜ்பாய் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயம்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  14 Dec 2018 8:14 PM GMT

வாஜ்பாய் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது. மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் கடந்த 1924 ஆம் ஆண்டு கிருஷ்ணா தேவி மற்றும் கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாய்க்கு டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி பிறந்தவர் அடல் பிகாரி வாஜ்பாய். விக்டோரியா கல்லூரியில் சமஸ்கிருதம், இந்தியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். கான்பூர் டி.ஏ.வி கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.



சட்டப்படிப்பில் சேர்ந்த வாஜ்பாய், அதை பாதியில் விட்டுவிட்டு, 1939-ல் ஆர்எஸ்எஸ் அமைப்பில் முழுநேர பிரச்சாகராக சேர்ந்தார். 'பாஞ்சஜன்யா' என்ற இந்தி வார இதழ், 'ராஷ்டிரதர்மா' என்ற இந்தி மாத இதழ், 'அர்ஜுன்', 'ஸ்வதேஷ்' நாளேடுகளில் ஆசிரியராகப் பணியாற்றிய வாஜ்பாய்,  ஷியாமா பிரசாத் முகர்ஜி தொடங்கிய 'பாரதிய ஜனசங்கம்' கட்சியின் நிறுவனர்களில் ஒருவராக செயல்பட்டார். நாட்டின் விடுதலைக்குப் பிறகு நடந்த 2-வது மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.



பாரதிய ஜனசங்கத்தின் மக்களவை கட்சித் தலைவராக 1957 முதல் 1977ஆம் ஆண்டு வரை அவர் பதவி வகித்தார். மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி, குஜராத் மாநிலங்களில் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு வென்றார். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் 1977-ல் வெளியுறவு துறை அமைச்சராக அங்கம் வகித்தார் வாஜ்பாய். பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக 1980 முதல் 6 ஆண்டுகாலம் இருந்தார். இந்தியப் பிரதமராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். இயற்கையை நேசிப்பவர், சிறந்த எழுத்தாளர், வசீகரமான பேச்சாளர், கவிஞர், கட்சி வேறுபாடின்றி அனைவராலும் விரும்பப்பட்ட ஆளுமை அடல் பிகாரி வாஜ்பாய்.  தற்போது இவருடைய உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது.
இதுகுறித்து மத்திய நிதித்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயை கெளவரவிக்கும் வகையில் அவர் உருவம் பொறித்த ₹100 நாணயம் வெளியிடப்படுமென கூறப்பட்டுள்ளது. அந்த நாணயத்தின் ஒருபுறத்தில் வாஜ்பாய் உருவமும்,அதற்கு கீழ் அவரது பெயர் தேவநகரி மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அவரது தோற்றம், மறைவு ஆண்டுகள் இடம் பெற்றிருக்கும் என்றும், மறு புறத்தில் சிங்க சின்னமும், அதற்கு கீழ் ₹100  குறியீடும், சத்தியமேவ ஜெயதே என்ற தேவநாகரி எழுத்துகளும் இடம் பெற்றிருக்குமென கூறப்பட்டுள்ளது.



Source: NDTV

Next Story