Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்தியாவின் முதல் இரயில்வே பல்கலைகழகம் வதோதராவில் திறப்பு : நாட்டுக்கு அர்ப்பணித்த மோடி சர்க்கார்

இந்தியாவின் முதல் இரயில்வே பல்கலைகழகம் வதோதராவில் திறப்பு : நாட்டுக்கு அர்ப்பணித்த மோடி சர்க்கார்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  15 Dec 2018 6:19 PM GMT

இந்தியாவில் முதன் முதலாக இரயில்வேக்கென தனி பல்கலைகழகத்தை குஜராத் மாநிலம் வதோதராவில் திறந்து வைத்து மோடி சர்க்கார், நாட்டுக்கு அர்ப்பணித்தது.


உலகில் இரயில்வே துறைக்கென தனியாக பல்கலைக் கழகங்கள் கொண்ட நாடுகள் சீனா மற்றும் ரஷ்யாதான். உலகின் மிகப்பெரிய இரயில்வேயை கொண்ட நம் நாட்டில் ரயில் போக்குவரத்துக்கென உயர் கல்வி வேண்டும் என்பதும், இதற்கென தனி பல்கலைகழகம் அமைக்கப்பட வேண்டும் என்பதும் ரயில்வே துறையின் நீண்ட கால கோரிக்கையாகும். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மோடி சர்க்கார் குஜராத் மாநிலம் வதோதராவில் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து நிலையத்திற்கான தனி பல்கலைக்கழகம் அமைத்துள்ளது.


இப் பல்கலைக்கழகத்தில் போக்குவரத்து தொழில்நுட்பத்தில் பி.எஸ்.சி., மற்றும் போக்குவரத்து மேலாண்மையில் பி.பி.ஏ படிப்புகள் சென்ற செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. 20 வெவ்வேறு மாநிலங்களிலிருந்து 103 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். மேலும் போக்குவரத்து கொள்கை மற்றும் பொருளாதாரம், சிஸ்டம்ஸ் டிசைன், டிரான்ஸ் சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் போன்ற பாடத்திட்டங்கள் வரும் கல்வி ஆண்டிலிருந்து தொடங்கப்பட உள்ளது. இத் திட்டத்துக்கென ரயில்வே அமைச்சகம் ₹421 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


வதோதராவின் வாகோகிய தாலுகாவில் இப்பல்கலைக் கழகத்துக்காக 110 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை குஜராத் மாநில அரசு ஆர்வத்துடன் செய்து வருவதாக மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் பத்திரிக்கையாளரிடம் தெரிவித்தார். இந்த நிலையில் புதிதாக தொடங்கப்பட்ட இந்த பல்கலைக் கழகத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தனர்.

Next Story