Top
undefined
Begin typing your search above and press return to search.

ரபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி பொய் பிரச்சாரமா ? அம்பலமாகும் உண்மை

ரபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி பொய் பிரச்சாரமா ? அம்பலமாகும் உண்மை

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  15 Dec 2018 8:47 AM GMT





பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து ₹58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கிடையே, இந்த பேரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்புடன் கூடிய விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, வக்கீல் எம்.எல்.சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். பிறகு, வக்கீல் வினீத் தண்டா என்பவரும் அதே கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்தார். ஆம் ஆத்மி பிரமுகர் சஞ்சய் சிங்கும் வழக்கு தொடர்ந்தார்.பின்னர், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி மற்றும் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்த நிலையில், கடந்த மாதம் 14-ந்தேதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில், தலைமை நீதிபதி அமர்வு, இம்மனுக்கள் மீது இன்று தீர்ப்பு அளித்தது. அப்போது ‘ரபேல்’ விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன் விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். ரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் என்றும், அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த தீர்ப்பு குறித்து அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர், தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என பா.ஜ.க தலைவர்கள் கூறிவருகின்றனர். ரபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு குறித்து கருத்து தெரிவித்த நிதி மந்திரி அருண் ஜேட்லி, உண்மைக்கும் பொய்களுக்கும் இடையில் ஒரு சிறிய வேறுபாடு உள்ளது. பொய்களுக்கு வயது மிகவும் குறைவு. ரபேல் ஒப்பந்தம் மூலம்  இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வர்த்தக நலன்களில் முன்னேற்றம் காணப்படும் என அருண் ஜேட்லி தெரிவித்தார்.



அதே நேரத்தில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மத்திய அரசாங்கத்தின் வெற்றி என்று கூறியுள்ளார். ரபேல் விஷயத்தில் அனைத்து விதமான கேள்விகளுக்கு நான் பதில் அளித்துள்ளேன். அதனால் தான் ரபேல் ஒப்பந்தத்தில் உள்ள எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டதாக உச்ச நீதிமன்றம் கூறியது என தெரிவித்தார்.ரபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பொய் பிரச்சாரம் அம்பலமாகி உள்ளது என்று பா.ஜ.க தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.





Next Story